பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 341 சிறிது நேரத்தில் காலகுதா என்ற விஷம் கடலினின்று வரவும் சிவபெருமான் அவ்விஷத்தை விழுங்கினார். இதனால் அவருடைய கழுத்துப் பகுதி நீலநிறமாக மாறியதால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது. பிறகு வருணி என்ற தேவதை வெளியே வந்தாள். தேவர்கள் அவளை ஏற்றுக் கொண்டதால், 'சுரர்கள் என்றும் ராட்சசர்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அசுரர்கள் என்றும் பெயர் பெற்றனர். அந்த தேவதைக்குப் பின் பாரிஜாதம் என்னும் மரம் வந்தது. இந்திரனுடைய தோட்டத்தில் இடம்பெற்று, தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. இதைத் தொடர்ந்து வந்த கெளஸ்துப மணி மாலை, விஷ்ணுவால் ஆபரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு கபிலா என்னும் பசுவும், உச்சைஸ்ரவம் என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும் வந்தன. பிறகு அப்ஸரஸ்கள் வந்தனர். தொடர்ந்து இலட்சுமி தோன்றி விஷ்ணுவுடன் இரண்டறக் கலந்தாள். கடைசியாக தன்வந்தரி என்னும் தேவதை அமிர்தத்தை உடைய பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்தாள். ஜம்பா என்னும் தைத்தியர் பாதி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துக் கொண்டு சென்றார். தைத்தியர்களைத் திசை திருப்புவதற்காக விஷ்ணு பெண் வடிவு எடுத்து, அவர் முன்னே சென்று நின்றார். அழகிய பெண்ணைக் கண்ட அசுரர்கள் அப்பெண்ணிடம், “நீ மிக அழகாக இருக்கிறாய்! இந்த அமிர்தத்தை எடுத்து எங்களுக்குக் கொடு!" என்றனர். பெண் வடிவிலிருந்த விஷ்ணு அதனை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்து, அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கி னார். அதற்குள் ராகு என்ற அசுரன், சந்திரனைப் போன்று வடிவெடுத்து தேவர்களுடன் அமர்ந்து அமிர்தத்தைச் சிறிது உண்டான். இதைப் பார்த்துச் சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். உடனே விஷ்ணு, ராகுவின்