பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 பதினெண் புராணங்கள் தலையை வெட்டி விட்டார். ஆனால் ராகு சிறிது அமிர்தம் சாப்பிட்டிருந்த காரணத்தினால் அவன் சாகவில்லை. விஷ்ணுவை வேண்டி, "சூரியனையும், சந்திரனையும் தான் விழுங்கி விட வேண்டும்" என்ற வரத்தினைப் பெற்றான். சூரியன், சந்திரன் ஆகியோரை ராகு விழுங்குவதை முறையே சூரிய, சந்திர கிரகணங்களின் போது காணலாம். 3. வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாக வருவது வராக அவதாரமாகும். காசிப முனிவனுக்கும், திதிக்கும் மகனாகப் பிறந்தான் ஹிரண்யாக்ஷா, இவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். தவம் செய்து தன்னை யாரும் போரில் வெல்லக் கூடாது' என்ற வரத்தினை பிரம்மாவிடம் பெற்றான். இதனால் தேவர்களுடன் போர் தொடுத்து தேவருலகையும், வருணன், கடல் அரசன் ஆகியோரையும் வென்று நிலவுலகம், பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் தானே அரசனாக இருந்தான். ஹிரண்யாக்ஷா கடலுக்கடியில் உள்ள வருணனின் அரண்மனையில் இருந்து வந்தான். அதனால் பூமியைக் கடலுக்குக் கீழே கொண்டு சென்று ஆட்சி செய்து வந்தான். இதனால் கோபம் அடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டு, "தாங்கள் தேவருலகத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பூமியைக் கடலுக்கு மேலே கொண்டு வர வேண்டும்" என்றும் வேண்டினர். இதைக் கேட்ட விஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் சென்றார். விஷ்ணு என்பதை அறியாத ஹிரண்யாக்ஷா, வராகத்துடன் போர் செய்தான். பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த போரின் முடிவில் வராகம் தன்னுடைய கொம்பினால் அசுரனைக் கொன்றது. தன்னுடைய கொம்புகளுக்கிடையே பூமியைக் கடலுக்கு மேலே தூக்கி வந்து வைத்தது. .