பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/373

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


344 பதினெண் புராணங்கள் ஒருநாள், தன் மகன் பிரகலாதனை அழைத்த ஹிரண்ய கசிபு, "மகனே! ஒவ்வொரு முறை நான் உன்னைக் கொல்லுவதற்கு முயற்சித்தும், நீ அதிலிருந்து தப்பிவிட்டாய். இது எவ்வாறு நிகழ்ந்தது?” என்று வினவ, உடனே பிரகலாதன், "தந்தையே! ஒவ்வொரு முறையும் விஷ்ணு என்னைக் காப்பாற்றுகிறார். விஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார்” என்று கூறினான். இதனால் கடுங்கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ஒரு தூணினைக் காட்டி மகனிடம், "இதனுள்ளும் உன்னுடைய விஷ்ணு இருக்கின்றாரா?” என்று வினவ, மகனும், ஆம் என்று சொன்னான். "அப்படியானால் நான் இந்தத் துணினை எட்டி உதைக்கிறேன். உன்னுடைய விஷ்ணு வருகின்றாரா என்று பார்க்கலாம்” என்று துணினை எட்டி உதைத்தான். இரண்டாகப் பிளந்த அத் தூணிலிருந்து மனித உடலுடனும், சிங்கத்தின் தலையுடனும் நரசிம்ம அவதாரமாக வெளிவந்த விஷ்ணு, அசுரனைத் தன்னுடைய தொடையின் குறுக்கே படுக்க வைத்து, தன்னுடைய கூரிய நகங்களால் ஹிரண்யகசிபு நெஞ்சினைக் கிழித்துக் கொன்றார். இறுதியில் பிரகலாதனை அரசனாக நியமித்து விட்டு தேவர்களைத் தேவருலகத்திற்கு அனுப்பி வைத்தார் விஷ்ணு. 5. வாமன அவதாரம் பிரகலாதனின் பேரனாகப் பிறந்தவன் பலி. மிகுந்த பலசாலியாகவும் வீரமுள்ளவனாகவும் திகழ்ந்த பலி அசுரர்களின் தலைவனாக இருந்தான். அப்பொழுது, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், தேவர்கள் தோல்வி அடைந்தனர். உடனே விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். விஷ்ணுவும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி கூறினார். .