பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 பதினெண் புராணங்கள் இட்டான். சீதையின் விருப்பப்படி பொன் மானை விரட்டிக் கொண்டு இராம இலக்குவர் போய்விட்டனர். சீதை தனியே இருப்பதை அறிந்த இராவணன் அவளைக் கவர்ந்து செல்லும் பொழுது, ஜடாயு என்ற கழுகின் வேந்தன் அதைத் தடுக்க முயல, இராவணனால் கொல்லப்பட்டான். சீதையை எடுத்துச் சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான் இராவணன். மீண்டு வந்த இராம இலட்சுமணர் சீதையைக் காணாததால் பல இடங்களில் தேடிச் சென்று சுக்ரீவனை துணைக்குக் கொண்டு, அவன் தமயன் வாலியைக் கொன்று, குரங்குப் படையுடன் கடற்கரை அடைந்த இராமன், சேதுவுக்கும் இலங்கைக்கும் ஒரு கல் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று இராவணன் தம்பி கும்பகர்ணன், அவன் மகன் இந்திரஜித்தன். இராவணன் அனைவரையும் கொன்று சீதையை மீட்டு வந்து முடி சூடிக்கொண்டான். தம்பி சத்ருக்கனனைக் கொண்டு லவணன் என்ற அசுரனைக் கொன்று வருமாறு கட்டளை இட்டான். சத்ருக்கனன் அப்படியே செய்து அந்த நாட்டில் மத்ரா என்ற நகரை ஸ்தாபித்தான். ஜைனுசா என்ற கந்தர்வன் மக்களைக் கொடுமைப்படுத்தியதால் இராமன் உத்தரவின்படி பரதன் ஜைனுசாவுடன் போர் தொடுத்து அவனை வென்று அவன் நாட்டை இரு கூறுகளாகப் பிரித்து தக்ஜா என்ற மூத்த மகனுக்குத் தக்புசீலா என்ற பகுதியையும், புஷ்கரன் என்ற இரண்டாவது மகனுக்குப் புஷ்கரவதி என்ற பகுதியையும் பிரித்துக் கொடுத்து ஆளுமாறு செய்தான். இராமன் பிள்ளை களாகிய லவ, குசர்களோடு பதினோராயிரம் ஆண்டுகள் நாட்டைச் சிறந்த முறையில் ஆட்சி செய்து உயிர் துறந்தான். அக்னி புராணத்தில் கண்டுள்ளபடி இராமாயணக் கதை இதுவாகும். இக்கதையை நாரதரிடம் கேட்டு வால்மீகி