பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம புராணம் 9 அரசனாகிய கருடனும், அருணாவும் மக்களாகத் தோன்றினர். தாமராவின் வழியில் ஆந்தைகள், வல்லூறுகள், காகங்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் தோன்றின. குரோத வஷாவிற்கு 14,000 பாம்புகள் பிறந்தன. இலா என்பவள் வயிற்றில் மரங்கள், செடி கொடிகள் தோன்றின. கத்ரு என்ற பெண்ணின் வயிற்றில் அனந்தன், வாசுகி, தட்சகன், நகுசன் முதலிய நாகங்கள் தோன்றின. முனி என்ற பெண்ணிற்கு அப்சரஸ்கள் பெண்களாகத் தோன்றினர். அதிதியின் பிள்ளைகளாகிய தேவர்களுக்கும், திதியின் பிள்ளைகளாகிய அசுரர்களுக்கும் ஓயாது போர் நடந்தது. பல அசுரர்கள் தேவர்கள் தலைவனாகிய இந்திரனால் கொல்லப் பட்டனர். இதனை அறிந்த திதி இந்திரனைக் கொல்ல தனக்கு ஒரு பிள்ளை வேண்டுமென விரும்பினாள். அப்படி ஒரு பிள்ளை வேண்டுமானால் நூறு ஆண்டுகள் அவளுடைய கருவில் அப்பிள்ளை இருக்குமென்றும், அந்த நூறு ஆண்டு களும் மிகக் கடுமையான விரதங்கள் அனுஷ்டித்து கடுந்தவம் புரிய வேண்டும் என்றும் காசியபர் கூறினார். அப்படியே செய்வதாக ஏற்றுக் கொண்டாள் திதி. விரதத்தை மேற் கொண்டு பல ஆண்டுகள் சென்றன. தன்னைக் கொல்ல திதியின் வயிற்றில் ஒரு சிசு வளர்வதை அறிந்த இந்திரன் அதனை அழித்துவிடக் காலம் பார்த்திருந்தான். ஒரு நாள் அனுஷ்டானங்களை முடித்த திதி, கால்களைக் கழுவித் தூய்மை செய்து கொள்ளாமல் படுக்கையில் படுத்து விட்டாள். இந்த விரத பங்கத்தையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்திரன், ஒர் அணு வடிவாக அவள் கால்களில் நுழைந்து கருவில் இருக்கும் சிசுவை ஏழு துண்டங்களாக வெட்டினான். அந்த ஏழு துண்டங்களும் ‘ஓ’ எனக் கதறி அழுதன. அழாதீர்கள் என்ற பொருளுடைய மருத்' என்ற சொல்லை மும்முறை இந்திரன் கூறியும் அத்துண்டங்கள் அழுகையை