பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 351 எழுதினார். இராமனாக விஷ்ணு அவதரித்தது ஏழாவது அவதாரம் ஆகும். 8. கிருஷ்ண அவதாரம் பிரம்மனின் மகனாகிய அத்ரி முனிவரின் வழியில் தோன்றியவன் யயாதி மன்னன். அவனது இரு மனைவியருள் தேவயானியின் மகனாகிய யாதுவின் பரம்பரையில் வந்தவர்களே யாதவர்கள். யாதவ குலத்தில் தோன்றிய வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது மகனாக விஷ்ணு அவதரித்தார். கிருஷ்ணன் என்ற பெயர் சூட்டப்பெற்ற அவர் தேவகியின் சகோதரனாகிய கம்சனின் கொடுமைகளுக்குப் பயந்து நந்தகோபர்- யசோதையிடம் வளர்ந்தார். நந்தனிடம் வளர்ந்து வந்த பலதேவனையும், கிருஷ்ண னையும் கொல்வதற்காகக் கம்ச மன்னன் பூதனை என்ற அரக்கியையும் அனுப்பினார். அவளைக் கிருஷ்ணன் கொன்றான். யமுனை நதியில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும், அரிஷ்டா, விரிஷபா, கேசி, தேனுகா என்ற பல அரக்கர்களையும் கிருஷ்ணன் கொன்றார். இந்திரனை வழிபடுவதை நிறுத்திய கிருஷ்ணன், இந்திரன் கோபம் கொண்டு கோகுல மக்களைக் கொல்வதற்காக அனுப்பிய கொடிய மழையினின்றும் காப்பாற்றினார். கோவர்த்தன மலையினைத் தூக்கி, அதன் கீழே மக்கள் மழைக்கு ஒதுங்கி நிற்கும்படி செய்து அவர்களைக் காப்பாற்றியதால் கோவர்த்தன் என்ற பெயர் பெற்றார். தன் சகோதரி தேவகியின் எட்டாவது மைந்தனால் தனக்குச் சாவு நேரிடும் என்பதை அறிந்த கம்ச மன்னன் கிருஷ்ணனைக் கொல்லப் பல வழிகளில் முயன்றான். மதுராவிற்குக் கிருஷ்ண பலராமரை வரவழைத்து, குவலயா பீடம் என்ற மதம் பிடித்த யானை மூலமும், சானுரன்,