பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பதினெண் புராணங்கள் முஷ்டிகன் என்ற மல்யுத்த வீரர்களை அனுப்பியும் கொல்ல ஏற்பாடு செய்தான். அம்முயற்சியில் கம்சனால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் கிருஷ்ணன் கம்சனைக் கொன்றார். கம்சனின் மனைவியின் தந்தையாகிய ஜராசந்தன், கம்சன் இறந்த செய்தி கேட்டு யாதவர்களைக் கொடுமைப்படுத்தினான். கிருஷ்ணனுடன் நீண்டகாலம் யுத்தம் செய்து முடிவில் இறந்து போனான். பிறகு யாதவர்கள் கிருஷ்ணன் கூறியபடி துவாரகை என்ற நகரத்தைத் தோற்றுவித்து அங்கு குடியேறினர். நரகாசுரன் என்ற அசுரன் தேவர்கள், கந்தர்வர்களின் மகளிர் பதினாயிரம் பேரைச் சிறை வைத்திருந்தான். இவர்கள் அனைவரையும் மீட்டு கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். பஞ்சஜன என்ற தைத்திரியனையும், காலயவன னையும் கொன்றது கிருஷ்ணனின் வீரத்தின் எடுத்துக் கிருஷ்ணனுக்குச் சம்பா, பிரத்யும்னன் என்ற பிள்ளைகளும் இருந்தனர். இவர்களில் பிரத்யும்னனை சம்பரா என்ற அசுரன் கவர்ந்து சென்று கடலில் வீசிவிட்டான். அக் குழந்தையை ஒரு மீன் விழுங்கி விட்டது. அம்மீனை ஒரு மீனவன் சம்பராவின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். அந்த மீனை வெட்டிய மாயாவதி என்ற பெண், மீனின் வயிற்றில் உள்ள குழந்தையைப் பார்த்து அக்குழந்தையைத் தானே வளர்த்து வந்தாள். பெரியவனாக வளர்ந்த பிரத்யும்னன் சம்பராசுரனைக் கொன்று, மாயாவதியைத் திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்கு மகனாகப் பிறந்தான் அனிருத்தன். வலியின் மகனாகிய வாணாவின் மகள் உஷாவை, கந்தர்வ மணம் செய்து கொண்டான் அனிருத்தன். தன் மகள் அனிருத்தனை மணம் செய்து கொண்டதை அறிந்த வாணா,