பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/383

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


354 பதினெண் புராணங்கள் மணந்து, துரியோதனன் முதலிய நூறு பிள்ளைகளைப் பெற்றான். பாண்டு, குந்தியை மணந்து யுதிஷ்டிரன், பீமன், அருச்சுனன் என்ற மக்களையும், மாத்ரியை மணந்து நகுலன், சகாதேவன் என்ற மக்களையும் பெற்றான். பாண்டுவின் மகன்களாகிய பஞ்ச பாண்டவர்களை அழிக்க துரியோதனன் பல வழிகளில் முயன்றான். அரக்கு மாளிகைகளில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்தான், துரியோதனன். அங்கிருந்து தப்பிய பாண்டவர்கள், ஏகசக்ரா என்ற இடத்தில் பிராமணர்களைப் போன்று மாறு வேடத்தில் உலவினர். பாஞ்சால நாட்டு மன்னனைத் தோற்கடித்து அவன் மகளாகிய பாஞ்சாலியை ஐவரும் மணந்து கொண்டனர். பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்த துரியோதனன், வேறு வழியின்றி அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்தான். அக்னி தேவன் மூலம் தெய்வீக ஆயுதங்களைப் பெற்றான் அருச்சுனன். குருவாகிய துரோணர் அவனுக்குப் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார். ஒரு சமயம், பாண்டவர்கள் ராஜதுய வேள்வி நடத்தி, பல அரசுகளையும், பெரும் பொருட்களையும் பெற்றனர். இதனால் பொறாமை அடைந்த துரியோதனன் தன் மாமனாகிய சகுனியின் துணையுடன், சூதாட்டத்தில் பாண்டவர்களை வெற்றி கொண்டான். தோல்வியின் காரணமாகப் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒராண்டு அஞ்ஞாத வாசமும் ஏற்க வேண்டி வந்தது. திரெளபதியுடன் பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் முடித்த பஞ்ச பாண்டவர்கள், ஒராண்டுக் காலம் மாறுவேடத்தில் வாழ, விராட மன்னன் அவைக்கு வந்தனர். கெளரவர்களுக்கும், விராட மன்னனுக்கும் நடந்த போரில், பாண்டவர்கள் விராட மன்னனுக்கு உறுதுணையாக நின்று