பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 355 வெற்றி பெற்றனர். ஒராண்டுக் காலம் முடிந்த பின்னர், விராட அரசன் மகளாகிய உத்தரையை, அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவிற்கு மணம் முடித்தனர். மீண்டும் அஸ்தினாபுரம் திரும்பிய பாண்டவர்கள் தங்களுக்குச் சேரவேண்டிய அரசாட்சியைக் கேட்க, துரியோதனன் மறுத்தான். கிருஷ்ணனே இவர்களுக்குத் தூதாகச் சென்று, ஐந்து கிராமங்களையேனும் பாண்டவர் களுக்குக் கொடுக்கும்படி சொல்ல, துரியோதனன் அதற்கும் மறுத்து விட்டான். குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் பாண்டவர் களுக்கும் கெளரவர்களுக்கும் போர் துவங்கியது. வயதில் மூத்தவர்களாகிய பீஷ்மர், குருவாகிய துரோணர் முதலியோர் கெளரவர்கள் பக்கம் இருந்து போர் புரிவதைக் கண்ட அருச்சுனன், போர் செய்தவற்குச் சற்றுத் தயங்கினான். அருச்சுனனுக்குக் கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே 'பகவத் கீதை' எனப்படும். இதில் கிருஷ்ணன் அருச்சுனனைப் பார்த்து, “அருச்சுனா பீஷ்மர், துரோணர் இப்போரில் இறந்து விடுவார்களோ என்று கலங்க வேண்டாம். இறப்பு என்பது அவர்களின் உடலுக்கு மட்டுமே. ஆன்மாவிற்கு என்றுமே இறப்பு இல்லை. மனிதன் இறந்தவுடன் அவனது ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியே வரும் ஆன்மா, வேறோர் உடம்பிற்குள் புகுந்து விடுகிறது. ஆகையால் ஆன்மா என்றும் அழியாதது. ஆன்மாவும் பரமாத்மாவும் இரண்டறக் கலக்கும் பொழுது ஏற்படுவதே உண்மையான விடுதலை” என்றார். கிருஷ்ணனின் உபதேசத்தைக் கேட்ட அருச்சுனன், போர் செய்ய ஆரம்பித்தான். சிகண்டியின் உதவியுடன் பீஷ்மரை வென்றான். இருப்பினும், பீஷ்மர் உடனே சாகவில்லை. “நான் எப்பொழுது உயிரை விட வேண்டும் என்று விரும்புகிறேனோ, அப்பொழுதுதான் என் உயிர் பிரிய வேண்டும்” என்று ஒரு வரத்தைப் பெற்றிருந்தார் பீஷ்மர். அருச்சுனனால்