பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 357 பல யாகங்கள் செய்து திறம்பட ஆட்சி செய்து வந்தான். சில காலங்களில் யாதவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர் என்று கேள்வியுற்று, தன் அரச பதவியைப் பரிட்சித்துவிடம் ஒப்படைத்து விட்டு, பல க்ஷேத்திரங்கள் சென்று இறுதியில் இறந்து போயினர். கிருஷ்ணன், பாண்டவர்களைத் தனது கருவியாக உபயோகித்து, கெட்டவைகளை அழித்து, நல்லவைகளை நிலை நிறுத்தினார். யாதவர்களும் அழியப் போவத்ை அறிந்த கிருஷ்ணன், பிரபாச என்ற rேத்திரத்தில் இறந்து போனான். கிருஷ்ணன் இறந்த பிறகு, அவரால் நிர்மாணிக்கப்பட்ட துவாரகை கடலில் மூழ்கியது. 9. புத்தரும் கல்கியும் விஷ்ணு தன்னுடைய ஒன்பதாவது அவதாரமாக புத்த அவதாரம் எடுத்தார். இனி வரப் போவது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம். į KGB) - ங்கு முன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுரர்கள் தேவர்களை வென்றனர். உடனே தேவர்கள் விஷ்ணுவிடம் பாதுகாப்புத் தேடி ஓடினர். விஷ்ணுவும் அவர்களிடம், “தேவர்களே! வீணாகக் கவலைப்பட வேண்டாம். மாய மோகா என்பவன் சுத்தோதனரின் மகன் புத்தனாகப் பிறப்பான்” என்று கூறினார். பல காலங்களுக்குப் பிறகு விஷ்ணுயாஷா என்பவனின் மகனாக, விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார். கல்கியின் குருவாக யக்ஞவல்கியர் இருப்பார். நான்கு வர்ணங்களும், நான்கு ஆசிரமங்களும் மீண்டும் நிர்மாணிக்கப்படும். மக்கள் புனிதமான வேதங்கள், சாத்திரங்களை மதித்துப் போற்று வார்கள். புதிய சத்திய யுகம் தோன்றும். ஒவ்வொரு