பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 359 சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களைப் பிரார்த்திக்கும் பொழுது, பொதுவாக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுவதுடன், குறிப்பிட்ட தெய்வங்களைப் பிரார்த்தனை செய்யும் பொழுது அந்தத் தெய்வத்திற்குரிய சிறப்பான மந்திரங்களையும், அக்னி புராணம் கூறிச் செல்கிறது. பிரார்த்தனை தொடங்குவதற்கு முன் குளிக்க வேண்டும் என்று கூறுவதுடன், குளிக்கக் கூடப் பல முறைகளைக் கூறுகிறது அக்னி புராணம். கோயில் கட்டுதல் ஒருவன் பொருள்களைக் கொண்டு கோயில் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினால் நூறு ஜென்மங்களில் செய்த பாவம் போகும். கோயில் கட்டுபவரின் மூதாதையர்கள் நரகத்திலிருந்து விடுபடுவர். ஒரு கோயில் கட்டுபவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். இரு கோயில்கள் கட்டுபவர் பிரம்ம லோகத்திற்கும், ஐந்து கோயில்கள் கட்டுபவர் சிவலோகத்திற்கும், பதினாறு கோயில் கட்டுபவர் பிறப்பினின்றும் விடுபடுவர். தானம் செய்வதினால் ஏற்படும் புண்ணியத்தைவிட, கோயில் கட்டுவதால் ஏற்படும் புண்ணியம் அதிகம். சிலை வடித்தல் கோயில் கட்டுவதைவிட, ஒரு சிலை வடிப்பது அதிக புண்ணியம். தெய்வங்களின் சிலைகளை, நகரத்தை நோக்கிப் பார்க்கும்படியாக நிர்மாணிக்க வேண்டும். நகரத்துக்கு வெளியே பார்க்கும்படியாக அமைக்கக் கூடாது. இந்திரன் சிலை நகருக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். சண்டியின் சிலை நகருக்குத் தென்புறத்திலும், பிரம்மன் சிலை நகர் நடுவிலும் இருக்கவேண்டும். விஷ்ணுவின் சிலையை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம்.