பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பதினெண் புராணங்கள் நிறுத்தவில்லை. சினம் கொண்ட இந்திரன் ஒவ்வொரு துண்டத்தையும் ஏழு துண்டுகளாக, ஏழு துண்டங்களையும் வெட்டி 49 துண்டங்களாக ஆக்கிவிட்டான். காலாந்திரத்தில் இந்த நாற்பத்தி ஒன்பதும் பிறந்தன. மருத்' என்று இந்திரனால் அழைக்கப்பட்டமையின் 'மருத்துகள் என்ற பெயருடனேயே இவர்கள் வழங்கப்பட்டனர். விரதபங்கம் ஆகிவிட்டபடியால் இந்த 49 மருத்துகளும் இந்திரனுக்குப் பகையாகாமல் அவன் நண்பர்களாகி விட்டனர். சுயம்பு மனுவின் மகனான உத்தானபாதனுக்கு மகனாவான் துருவன். துருவன் பரம்பரையில் வந்தவன் அங்கா. நேர்மை உடையவனான அங்கா நல்லமுறையில் ஆட்சி செய்தாலும், அவன் மனைவியாகிய சுனிதா தீயவனான மிருத்யுவின் மகளாவாள். அவள் மகனான வெனா” தகப்பனைப் போலில்லாமல் மிகவும் தீயவனாக இருந்தான். மேலும் தாய்வழிப் பாட்டனாகிய மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ற அகங்காரம் கொண்டவனாக இந்த அண்டங்களுக்கு எல்லாம் தானே தலைவன் என்று சொல்லித் திரிந்தான். இவனைத் திருத்துவதற்காக மாரீச்சியின் தலைமையில் பல முனிவர்கள் ஒன்று சேர்ந்து வந்து எவ்வளவு எடுத்துச் சொல்லியும், வெனா அவர்கள் அறிவுரை களைக் கேட்கத் தயாராக இல்லை. எல்லையற்ற சினம் கொண்ட முனிவர்களில் அத்ரி என்ற முனிவர் வெனாவின் வலக்காலைப் பிடித்து முறுக்கி மாவு பிசைவது போல் பிசைந்தார். மிகக் குரூரமானதும், கொடியதும், பயங்கர மானதும், கரியதும் ஆன குள்ளன் ஒருவன் இக்காலின் வழி வெளிப்பட்டான். இந்த உருவத்தைக் கண்டு கலக்கமுற்ற அத்ரி முனிவர் உட்கார் என்ற பொருளுடைய நிஷிதர் என்று கூறினார். எனவே இந்தக் குள்ளனின் பரம்பரை நிஷிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். காலை முறுக்கிய பிறகு இந்த