பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 351 முட்டிய வயிறுடன், தாடி, மற்றும் சடையுடன் கூடிய முடியுடனும் இருக்க வேண்டும். பிரம்மன் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பது போல் இருக்க வேண்டும். பிரம்மனின் இருபுறத்திலும் சரஸ்வதி, சாவித்ரி ஆகியோரின் சிலை அமைக்கப்பட வேண்டும். விஷ்ணுவின் சிலை எட்டுக் கைகள் உடையதாய் இருக்க வேண்டும். ஏழு கைகளில் முறையே வாள், கதாயுதம், அம்பு, வில், கேடயம், சக்கரம், சங்கு ஆகியவை இருக்க வேண்டும். எட்டாவது கை விரிந்து பரமளிப்பது போல் இருக்க வேண்டும். கருட வாகனத்தில் அமர்ந்திருப்பது போலவும், கருடனுக்கு எட்டுக் கைகளும் இருக்க வேண்டும். விஷ்ணுவின் வலப் புறத்தில் லட்சுமி, சரஸ்வதியின் சிலைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். இலட்சுமியின் கைகளில் தாமரை மலரும், சரஸ்வதி வீணையை வைத்திருப்பது போலவும் வடிக்க வேண்டும். விஷ்ணுவின் விஸ்வரூப வடிவம் வடிக்கப்பட வேண்டும். இச்சிலைக்கு நான்கு தலைகளும், இருபது கைகளும் அமைக்கப்பட வேண்டும். சண்டியின் உருவம் இருபது கைகள் கொண்டதாக இருக்க வேண்டும். வலப்புறத்தில் உள்ள பத்துக் கைகளில் முறையே ஈட்டி, வாள், சிறிய சட்டி, சக்கரம், பாசக்கயிறு, கேடயம், டமாரம் மற்றும் ஏதேனும் இரண்டு ஆயுதங்கள் இருக்க வேண்டும். பத்தாவது கை வரமளிப்பது போல் அமைக்கப்பட வேண்டும். இடப்புறத்தில் உள்ள பத்துக் கைகளில் முறையே பாம்பு, நீண்ட தடி, கோடரி, அங்குசம், வில், மணி, கொடி, கதாயுதம், கண்ணாடி மற்றும் தடி இருக்கவேண்டும் சண்டியின் உருவத்திற்கு முன் கழுத்து அறுபட்ட எருமையின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். அசுரன் எருமையின் உடலில் இருந்து வெளிவருவது போல் அமைக்கப்பட வேண்டும். அரக்கர்களின் முடி, கண்கள், மாலை, ஆகியவை சிவப்பு வர்ணத்தில்