பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 பதினெண் புராணங்கள் இருக்கவேண்டும். அரக்கன் வாயிலிருந்து இரத்தம் வருவது போலவும், கைகளில் ஆயுதங்களுடனும் இருக்க வேண்டும். அரக்கனின் கழுத்தில் பாசக்கயிறு மாட்டப்பட்டு, சண்டி தேவியின் சிங்கம் எதிர்ப்பது போல் இருக்கவேண்டும். தேவியின் வலது கால் சிங்கத்தின் மீதும், இடது கால் அரக்கனின் முதுகின் மேலும் இருக்கும். சண்டிக்குச் சிலசமயம் பத்து, பதினாறு அல்லது பதினெட்டு கைகளும் வடிக்கப்படும். சிவலிங்கம் களிமண், மரம், இரும்பு, நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, பாதரசம் ஆகியவற்றில் செய்யப்படலாம். தீர்த்த யாத்திரை இடங்கள் ஒரு யாகம் செய்து ஏற்படும் புண்ணியத்திற்கு ஈடாக ஒர் இடத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்வது அமையும். புஷ்கரா என்னும் இடம் மிகச் சிறந்த தீர்த்தமாகக் கருதப் படுகிறது. இந்த இடத்திற்குச் செல்ல கார்த்திகை மாதம் சிறந்ததாகும். புஷ்கராவில் இன்னும் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. அவை ஜம்புமார்க்கம், தண்டுலகாசிரமம் ஆகியவை. குருக்ஷேத்திரம் சிறந்த தீர்த்த யாத்திரை இடமாகும். சரஸ்வதி நதி, குருக்ஷேத்திரத்திற்கு அருகில் ஒடுகிறது. இந்நதியில் நீராடினால் ஒருவர் பிரம்மலோகம் அடைய முடியும். கங்கை நதி பாய்ந்து செல்லும் இடங்கள் அனைத்தும் புண்ணிய தீர்த்தங்களாகக் கருதப்படுகின்றன. கங்கை நதியில் மண்ணை எடுத்துத் தலைமீது வைத்துக் கொள்பவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிரயாகை என்பது மற்றொரு சிறப்பான இடம். பிரம்மன், விஷ்ணு. இந்திரன், மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள். அப்ஸரஸ்கள் எப்பொழுதும் இங்கு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இரண்டு புண்ணிய