பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 363 நதிகளாகிய கங்கையும் யமுனையும் இணைந்து பிரயாகையில் ஒடுகின்றன. முனிவர்களின் கூற்றுப்படி, மாசி மாதத்தில் ஒருவன் மூன்று நாட்கள் பிரயாகையில் நீராடுவது, கோடிக்கணக்கான பசுக்களை தானம் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது என்கின்றனர். சிவபெருமான், பார்வதியிடம் வாரணாசியின் சிறப்பைக் கூறியுள்ளார். சிவன் எப்பொழுதும் வாரணாசியை விட்டு நீங்குவதில்லை. வாரணா, அசி என்ற இரு நதிகளும் சேரும் இடத்தில் இந்நகரம் இருப்பதால் இதற்கு வாரணாசி என்று பெயர். காசி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நர்மதை நதியும் புனிதம் வாய்ந்தது. அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறப்புப் புண்ணியம் வாய்ந்தது கயா. கயாசுரன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து வந்தான். அத்தவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். கயாசுரன் முன்பு தோன்றிய விஷ்ணு, வரத்தினைப் பெற்றுக் கொள் என்று கூறினார். கயாசுரன் உடனே, "ஐயனே! எல்லாத் தீர்த்தங்களிலும் மிகப் புண்ணியம் வாய்ந்த தீர்த்தமாக நான் இருக்க வேண்டும்" என்று வேண்டினான். வரத்தினைப் பெற்றுக் கொண்ட கயாசுரன் மறைந்தான். தேவர்கள் சுவர்க்கலோகம் திரும்பினர். கயாசுரன் மறைந்த காரணத்தினால், பூமி வெறிச்சோடிக் கிடந்தது. உடனே விஷ்ணு, தேவர்களை அழைத்து யாகம் நடத்துமாறு கூறினார். கயாசுரனை சந்தித்து, அவன் உடம்பின் மீது யாகம் செய்ய வேண்டும் என்று கூறி, அவனுடைய உடம்பினைக் கேட்குமாறு கூறி அனுப்பினார். கயாசுரன் இதற்கு சம்மதித்த உடன் அவனுடைய தலை உடம்பினின்று கீழே விழுந்தது. உடனே பிரம்மன், கயாசுரனின் தலையற்ற உடல் மீது யாகம் நிகழ்த்தினார். ஆனால், யாகம் தொடங்கிய சில நேரத்தில், உடம்பு அசைய ஆரம்பித்தது. இதற்கு ஒரு