பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பதினெண் புராணங்கள் தீர்வு காணவேண்டி இருந்தது. தேவர்கள் அனைவரும் ஒரு கல்லில் புகுந்து, அக்கல்லினை கயாசுரன் உடலின் மீது வைத்தால், அவ்வுடம்பு அசையாமல் நிற்கும்; இதன் பின்பு யாகத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும் எண்ணினர். முடிவில் விஷ்ணுவே அக்கல்லினுள் புகுந்து கொண்டார். இதற்குக் காரணம், விஷ்ணுவும் தேவர்களும் எப்பொழுதும் கயாவில் தங்கி இருப்பவராவர். இக்கல்லினைப் பற்றி வேறொரு கதையும் வழங்கப் படுகிறது. பிரம்மனின் மகனாகிய மாரீச்சி காட்டிற்குச் சென்று மரம், மலர்களைக் கொண்டு வந்ததால் மிகவும் களைப்புற்று இருந்தான். தன் மனைவி தர்ம விரதாவை நோக்கி, நான் மிகவும் களைப்புடன் இருக்கிறேன். இன்று என்னுடைய கால்களை நீ கழுவிவிட வேண்டும் என்று கூறினான். தர்ம விரதாவும் சம்மதித்துத் தன் கணவனின் கால்களைக் கழுவி விடும் பொழுது, திடீரென்று பிரம்மா அங்கு வந்தார். தன் கணவனின் கால்களைக் கழுவுவதா அல்லது கணவனின் தந்தையாகிய பிரம்மனை உபசரிப்பதா என்று கலக்கமுற்ற தர்ம விரதா, உடனே பிரம்மனை வரவேற்றாள். இதனால் கோபம் கொண்ட மாரீச்சி அவள் கல்லாக மாற வேண்டும் என்று சாபமிட்டான். தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்த தர்ம விரதா, நீண்ட காலம் தவம் புரிந்தாள். அவள் தவத்தில் மனம் மகிழ்ந்த விஷ்ணு அவளுக்கு வரமளிக்க நினைத்தார். தர்ம விரதாவும், தன் கணவன் தனக்கு இட்ட சாபத்தி னின்று விடுதலை வேண்டும் என்று கேட்டாள். ஆனால், தேவர்களோ, “மாரீச்சி மிகவும் சக்தி வாய்ந்த முனிவர் என்றும், அவர் இட்ட சாபத்தைத் திரும்பப் பெற முடியாது” என்றும் கூறி, தர்ம விரதாவை ஒரு புனிதமான கல்லாக மாற்றி விடுவது என்றும், தேவர்கள் அக்கல்லில் எப்பொழுதும் தங்கி