பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 365 இருப்பதாகவும் உறுதி அளித்தனர். அந்தக் கல்லானது கயாசுரனின் உடல் மேல் வைக்கப்பட்டது. யாகம் முடிந்த பின்பு, விஷ்ணு கயாசுரனிடம் எல்லாத் தீர்த்தங்களிலும் மிகச் சிறந்த தீர்த்தமாக கயா கருதப்படும்’ என்று வரமளித்தார். இந்த கயா தீர்த்தத்தில்தான் பாண்டவர்கள் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்தனர். ஜோசியம் அடுத்து அக்னி புராணம் ஜோசியம் என்ற தலைப்பில் பல விஷயங்களை விரிவாகக் கூறுகிறது. உதாரணமாக, திருமணங்கள் சைத்ர, பெளஷ மாதங்களில் நடைபெறக் கூடாது என்றும், மிதுனம், துலாம் என்ற ராசிக்குரிய நாட்களில் திருமணம் நடைபெறக் கூடாது என்றும் யாத்திரை போவதற்கு வெள்ளிக்கிழமை சிறந்த நாள் என்றும், பூசம், அஸ்வினி, ஹஸ்தம், திருவோணம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இல்லாத நாட்களில் மருந்துண்ணக் கூடாது என்றும் சொல்கிறது. நோயில் கிடந்தவர்கள், குளிப்பதற்குச் சனிக் கிழமை சிறந்ததாகும். முதன்முதலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் பொழுது அது செவ்வாய்க் கிழமையாகவோ, சனிக் கிழமையாகவோ இருக்கக் கூடாது. காது குத்தல், புதன் அல்லது வியாழக் கிழமைகளில் நடைபெற வேண்டும். புதிய உடை ளை புதன் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் அணியக் கூடாது. இதைத் தொடர்ந்து, மன்வந்திரங்கள் பற்றியும் வர்ணாசிரமங்கள் பற்றியும் பிராயச்சித்தங்கள் செய்வது பற்றியும் அக்னி புராணம் பேசுகிறது.) விரதங்கள் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட திதி, கிழமை, குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட மாதம், பருவங்கள், சூரியன்