பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 367 சுக்கிலபட்சம் ஆறாவது நாள் அனுஷ்டிக்க வேண்டியது. சஷ்டி விரதம். இந்த விரதம் இருப்பவர்கள் வெறும் பழங்களை மட்டுமே உண்ணவேண்டும். இந்த விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் பலன்கள் என்றென்றும் நிற்பவை ஆகும். இவ்விரதம் கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்புடையதாகும். சுக்கிலபட்சம் ஏழாவது நாள் சூரியனுக்கு உகந்தது. இன்று எடுக்கப்படும் சப்தமி விரதம் மனத்தின் கவலைகள் அனைத்தையும் போக்க வல்லது. பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நினைப்பவை நடந்தேறும் குழந்தை பாக்கியமற்ற வர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கும். எட்டாவது நாள், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, மிக முக்கியமானது. கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஆதலால் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி மிக முக்கியமானதும், சிறப்பு வாய்ந்ததும் ஆகும். அந்நாளில் விரதம் இருந்து கிருஷ்ணனை வேண்டினால், ஏழு ஜென்மத்தில் செய்த பாவம் விலகி விடும். கிருஷ்ணனின் ஜெயந்தி அன்று ரோகிணி, சந்திரன், தேவகி, வசுதேவர், யசோதை நந்தன், பலராமன் ஆகிய அனைவரையும் வணங்க வேண்டும். கிருஷ்ணன் குறிப்பிட்ட இந்த அஷ்டமி திதியில் பிறந்ததால், அந்த நாளுக்கு ஜன்மாஷ்டமி என்ற பெயரும் வழங்கப்படுகிறது. சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம் இரண்டிற்கும் எட்டாவது நாள் அஷ்டமி திதி இருந்து அது எந்த மாதமாக இருப்பினும் அது சிறப்பு வாய்ந்த நாள் எனப்படும். உதாரணத்திற்கு அந்த நாள் புதன்கிழமை என்று எடுத்துக் கொண்டால், புதாஷ்டமி என்று பெயர். இவ்வாறு வரும் அஷ்டமியில் ஒருவர் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு காலத்தில் திரா என்ற பிராமணன், ரம்பா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து