பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


368 பதினெண் புராணங்கள் வந்தான். அவர்களுக்கு கெளசிகா என்ற மகனும், விஜயா என்ற மகளும் இருந்தனர். திராவிடம் தனடா என்று ஒர் எருமை இருந்தது. அந்த எருமையைப் புல்வெளிக்குக் கூட்டிச் சென்று உண்ண வைப்பது கெளசிகாவின் வேலை. ஒரு சமயம் கெளசிகா பாகீரதி நதியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எருமை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது சில திருடர்கள் வந்து, அந்த எருமையைத் திருடிச் சென்றனர். கெளசிகாவும், அவன் சகோதரியும் எருதினைத் தேடிக் கொண்டு, ஒர் ஆற்றின் அருகில் வந்தனர். அந்த ஆற்றில் சில பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கெளசிகாவும் அவன் சகோதரியும் தங்களுக்கு மிகவும் பசியாக இருக்கிற தென்றும், உண்ணுவதற்குச் சிறிது உணவு கொடுக்கும்படியும் கேட்டனர். அப்பெண்களும், அவர்கள் இருவரும் தங்களைப் போல் புதாஷ்டமி விரதம் இருந்தால் கொடுப்பதாகக் கூறினர். கெளசிகா, அவ்விரதத்திற்குரிய சடங்குகளைச் செய்தவுடன், அவனுடைய எருமை தெய்வாதீனமாகத் திரும்ப வந்து சேர்ந்தது. பிறகு கெளசிகா தன் சகோதரி விஜயாவை யமனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தான் அயோத்தியின் அரசனாக ஆட்சி செய்தான். சில காலங்களில் கெளசிகாவின் தாய் தந்தையர் இறந்து போயினர். விஜயா யமன் மூலமாக அவர்கள் நரகத்தில் இருப்பதாகவும், கெளசிகாவும் தானும் புதாஷ்டமி விரதம் அனுஷ்டித்தால் தன் பெற்றோரை நரகத்தினின்று விடுவிக்கலாம் என அறிந்து, அவ்வாறே செய்ய, அவர்களும் நரகத்தினின்று சொர்க்கம் போயினர். சுக்கிலபட்சம், ஒன்பதாம் நாள் வருவது நவமி திதி. அது அஸ்வினி மாதத்தில் வரும்பொழுது, கெளரி தேவியை வணங்கி விரதம் இருப்பதற்கு மிகச் சிறந்த நாளாகும்.