பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 甘 முனிவர்கள் வெனாவின் கையை முறுக்கிப் பிசைந்தார்கள். வெனாவினிடத்தில் இருந்த தீமைகள் முழுவதும் கால் வழியாகச் சென்றுவிட்டமையின், அவனிடமிருந்த நன்மைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிசையப்பட்ட கையின் வழியே ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு 'பிருத்து' என்ற ஒருவன் வெளிப்பட்டான். இவன் வெளிப்பட்டவுடன் வெனா இறந்து விட்டான். ஒளியுடன் வெளிவந்த பிருத்துவை இப்பூமிக்கு அரசனாக்கி, பிரம்மாவே முடி சூட்டினார். பூமியிலுள்ள பொருள்களுக்கெல்லாம் யார் யார் தலைவன் என்றும், அதே நேரத்தில் அத்தலைமைப் பதவிகளையும் பிரம்மாவே பங்கிட்டுத் தந்தார். அப்பங்கீட்டின்படி மரம், செடி, கொடிகள், விண்மீன்கள், கோள்கள், யாகங்கள், தியானம், வேதியர்கள் ஆகியவர்களுக்குத் தலைவனாகச் சோமனை (சந்திரன்) நியமித்தார். வருணன் கடலுக்கும், குபேரன் செல்வத்திற்கும் அரக்கர்களுக்கும் தலைவனாக்கப்பட்டான். பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் தலைவனாக விஷ்ணுவும், அஷ்ட வசுக் களுக்குத் தலைவனாக அக்னியும் நியமிக்கப்பட்டார்கள். எல்லா பிரஜாபதிகளுக்கும் தலைவனாக தட்சனும், 49 மருத்துக் களுக்கும் தலைவனாக இந்திரனும், தைத்திரியர்கள், தானவர்கள் என்பவர்களின் தலைவனாகப் பிரஹலாதனும் நியமிக்கப்பட்டனர். பிதுர்க்களுக்குத் தலைவனாக யமனும், யட்சர்கள், ராட்சதர்கள், பிசாசுகள் ஆகியவர்களின் தலைவனாக சிவனும், மலைகளின் தலைவனாக இமவானும் நியமிக்கப்பட்டனர். நதிகளுக்குக் கடலும், பாம்புகளுக்கு வாசுகியும், கந்தர்வர்களுக்கு சித்ரரதனும், பறவைகளுக்குக் கருடனும், யானைகளுக்கு ஐராவதமும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதோடு நில்லாமல் நான்கு திசைகளுக்கும் நான்கு தலைவர்களை நியமித்தார்.