பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 373 இருக்க வேண்டும். நாட்டில் நடக்கின்றவற்றை ஒருவருக்கும் தெரியாமல் அறிந்து அரசனிடம் நேரே சொல்லக் கூடிய ஒற்றர்களை நியமிக்க வேண்டும். அரசனுடைய ஆட்சி எல்லையில் உள்ளவர்கள் செய்யும் புண்ணியத்தில், ஆறில் ஒரு பங்கு அரசனைச் சென்றடையும். அதே போன்று குடிமக்கள் செய்யும் பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு மன்னனைச் சென்றடையும். பொய் கூறுபவனுடைய சொத்தில் எட்டில் ஒரு பங்கு தண்டனையாக விதிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்படும். காணாமல் போன ஒருவருடைய சொத்தை மூன்று வருடங்கள் வரை பாதுகாக்க வேண்டியது அரசனுடைய கடமை. மூன்று வருடம் முடிவதற்குள் சொத்தின் உரிமையாளர் வந்து கேட்டால் அரசன் அதனை ஒப்படைத்து விட வேண்டும். மூன்று ஆண்டுகள் முடிய சொத்துக்காரர் வரவில்லை என்றால், அந்தச் சொத்து, அரசனைச் சேர்ந்து விடும். மைனர்கள் என்று அழைக்கப்படும் இளம் குழந்தை களின் சொத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு வயது வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைப்பது அரசன் கடமையாகும். ஒர் அரசனுடைய ஆட்சி எல்லைக்குள் ஒரு பொருள் களவு போய்விட்டால், களவைக் கண்டு பிடிப்பதற்கு முன், அதே மதிப்புள்ள வேறு பொருளை, இழந்தவர்க்குக் கொடுத்துவிட வேண்டும். கள்வன் பிடிப்பட்டுக் களவாடப்பட்ட பொருளும் கிடைத்தால், அது அரசனின் கஜானாவில் சேர்க்கப்படும். ஐந்தில் ஒரு பங்கு தானியங்கள் வரியாகச் செலுத்தப்பட வேண்டும் கைவினைஞர்கள் இலவசமாக அரசனுக்கு வேலை செய்வார்கள். அரண்மனையிலிருந்து அவனுக்கு உணவு வழங்கப்படும். அரசன், இளவரசனை அதிக கவனத்துடன் வளர்க்க வேண்டும். நான்குவிதமான சாத்திரங்கள் அவனுக்கு போதிக்கப்பட வேண்டும். முதலாவது தர்மசாத்திரம். எது சரி.