பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 பதினெண் புராணங்கள் எது தவறு என்பதை இச்சாத்திரம் சொல்கிறது; இரண்டாவது அர்த்த சாத்திரம். இது பொருளாதாரத்தைப் பற்றிக் கூறுகிறது; மூன்றாவது தனுர்வேதம். போர் செய்யும் முறையினைக் கூறுகிறது. இறுதியாக வருவது சிற்ப சாத்திரம். இது கைவினை பற்றிக் கூறுகிறது. இளவரசனைப் பாதுகாக்க பாதுகாவலர் நியமிக்கப்பட வேண்டும். இளவரசனை எப்பொழுதும் படித்தவர்கள், மதிப்புக்குரியவர்களுடன் பழகுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இளவரசன் நல்ல பண்புகளுடன் வளரவில்லையெனில், அவனை சிறைக்கு அனுப்ப வேண்டியது அரசன் கடமை. சிறையில் அவன் செளகரியமாக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசன் வேட்டையாடுதல், மது அருந்துதல், சூதாட்டம் முதலியவற்றை அறவே விட்டுவிட வேண்டும். பிரயாணம் செய்வதிலேயே பொழுதைக் கழிக்கக் கூடாது. முதலில் தன்னிடம் வேலை செய்பவர்களிடம் நல்ல பெயரெடுத்து, பின்பு தன் நாட்டு மக்களிடம் அதேபோல் இருக்க வேண்டும். இதன்பிறகே அவன் பகைவர்களை வெல்லும் வலிமை பெறுகிறான். அரசாட்சிக்குக் கெடுதல் செய்பவர்கள் உடனடி யாகக் கொல்லப்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை உடனே செய்யாமல் காலம் தாழ்த்தினால், செய்யப்படுவதின் நோக்கம் வீணாகி விடும். அரசன் செய்ய நினைப்பதை யாரும் அறிந்து கொள்ளக் கூடாது. ஒன்றைச் செய்து முடித்தவுடன் அதன் பயனை அனுபவிக்கின்றவர்கள் இது அரசன் செயல் என்று புரிந்து கொள்வார்கள். மந்திரிகளை ஆலோசித்தே அரசன் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். உண்பதற்கு முன்னும், உறங்குவதற்கு முன்னும் உணவும், படுக்கையும் ஆபத்தில்லாதவையா என்று பார்க்க வேண்டும். அரசன் தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்துவதற்கு ஏழு வழிமுறைகள் உள்ளன. அவை சாம, தான, பேத தண்டம்,