பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/406

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அக்னி புராணம் 377 பஞ்சு, காய்ந்த புல், சாணி, தோல்பொருள், முடி, விதவை, உடைந்த பாத்திரம் ஆகியவைகளைப் பார்த்துவிட்டு வெளியே புறப்படக்கூடாது. புறப்படும் பொழுது இவற்றைப் பார்க்க நேர்ந்தால் சிறிது நேரம் தங்கி, விஷ்ணுவை தியானித்து விட்டுச் செல்ல வேண்டும். பிரயாணம் புறப்படும் பொழுது வாத்தியங்களின் ஒலி ஒலிக்கக்கூடாது. ஒரு காரியத்திற்கெனப் புறப்பட்டவர்களை மீண்டும் அழைக்கக் கூடாது. பின்வருவனவற்றைப் பார்த்துப் புறப்பட்டால் நல்ல சகுனம் என்று கூறப்படும். அவை: வெண்மையான பூக்கள், நீர் நிரம்பிய பாத்திரம், இறைச்சி, வயதான ஆடு, பசு, குதிரை, யானை, தீ, தங்கம், வெள்ளி, வாள், குடை, பழம், சங்கு, தயிர் இடியோசை பிணம் ஆகியவை ஆகும். கழுதை எதிரில் வந்தால் நல்லது நடக்கப் போகிறதென்று பொருள். பன்றி அல்லது எருது இடமிருந்து வலம் சென்றால் நல்ல சகுனம். வலமிருந்து இடம் சென்றால் கெட்ட சகுனம். குதிரை, புலி, நினைத்தது கைகூடும். நரி, பல்லி, பன்றி ஆகியவை இடப்புறம் இருந்தாலும், குரங்குகள் வலப்புறம் இருந்தாலும் நல்ல சகுனம். நரி ஏழுமுறை ஊளையிட்டால் நல்ல சகுனம். காகம் வீட்டின் வாசலில் வந்து குரல் கொடுத்தால் விருந்தினர் வருவர். ஒரு கண்ணினால் சூரியனைக் காகம் பார்த்தால் ஆபத்து வரப் போவதாக அர்த்தம். காகம் மண்ணை மேலே பூசியிருந்தால் நினைத்தது கைகூடும். நாய் வீட்டின் உள்ளே தொடர்ந்து குரைக்குமானால், வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும். ஒருவருடைய வழியை மறித்துக் கொண்டு நாய் நின்றால், திருடு போகும். நாயின் வாயில் இறைச்சியுடன் பார்த்தால் நல்ல சகுனம்.