பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 பதினெண் புராணங்கள் ஸ்தாவர, ஜங்கம சொத்துக்கள் ஆண்வாரிசு இல்லாமல் ஒருவன் இறந்தால், அவனுக்குக் கடன்கள் இருந்தால் அவன் சொத்துக்களுக்கு யார் உரிமை ஆகிறார்களோ, அவனே அக்கடன்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாரிசாக உள்ள ஆண்மகன் சொத்தை ஏற்கும் பொழுது, கடனையும் ஏற்க வேண்டும். ஆனால் கணவனோ, மகனோ கொண்ட கடனுக்கு மனைவி பொறுப்பாளி ஆகமாட்டாள். ஆனால் கணவனும் மனைவியும் சேர்ந்து கடன் வாங்கி இருந்தால், அப்பொழுது கணவனுக்குப் பிறகு மனைவி பொறுப்பாளி ஆவாள். சாட்சி இல்லாமல் கடன் கொடுக்கப் பட்டிருந்தாலும், அக்கடன் உண்மையாகவே கொடுக்கப்பட்டது என்று அரசன் நம்பினால் 64 நாட்களுக்குள் அக்கடனைத் திருப்பித் தர உத்தரவிடலாம். பொய் வழக்குக் கொண்டு வந்தான் எனத் தெரிந்தால், அவ்வழக்கைக் கொண்டு வந்தவனுக்கும், அதற்குச் சாட்சி கூறியவனுக்கும் தக்க தண்டனை வழங்கப்படும். பொய் சாட்சி கூறும் பிராமணன் நாடு கடத்தப்படுவான். ஒருவன் சாட்சி கூறுகிறேன் என்று ஒத்துக்கொண்டு, பிறகு பின்வாங்கினால், பொய் வழக்குப் போட்டவனுக்குக் கிடைக்கும் தண்டனையைப்போல் எட்டு மடங்கு அதிக தண்டனை கிடைக்கும். கடன் கொடுக்கும் பொழுது, கொடுப்பவன், பெறுபவன், சாட்சிகள் ஆகிய அனைவர் பற்றியும் முழு விபரங்கள் எழுத்தில் எழுதப்பட வேண்டும். கடன் பெற்றவர் தவணைமுறையில் கடனைத் திருப்பித் தந்தால், அத்தவணைகள் அனைத்தும் மூலக் கடிதத்தில் வரையப்பட வேண்டும். கடன் கொடுக்கும் பொழுது, சாட்சிகளின் எதிரே கொடுக்கப்படுவது போல, கடனைத் திருப்பி அடைக்கும் பொழுதும் சாட்சிகளை வைத்துக் கொண்டே திருப்பிக் கொடுக்க வேண்டும். சாட்சி கூற முன்வருபவர் தலையில் பஞ்சு, நெருப்பு, நீர், விஷம்