பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அக்னி புராணம் 385 மருத்துவம் தன்வந்தரி, தேவர்களுக்கு வைத்தியனாக இருந்தான். அவன் சுஷ்ருதா முனிவனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தைக் கற்றுக் கொடுத்தான். அக்னிபுராணம், சுஷ்ருதா முனிவர் கற்றுக் கொண்ட மருத்துவம் பற்றியும், என்ன நோய்க்கு என்ன மருந்து தரப்பட வேண்டும் என்பது பற்றியும் கூறுகிறது. இதில் விருகr ஆயுர்வேதம் என்ற தனிப்பகுதி இருக்கிறது. எந்தெந்த மரங்களை எங்கெங்கு நட வேண்டும் என்று கூறுகிறது. இவற்றோடு, விலங்குகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் பற்றியும், விஷமுறிவுகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது. இலக்கியமும் இலக்கணமும் கவிதைக்கு நான்கு வகையான சந்தங்கள் உண்டு. நெடுங்கணக்கில் மொத்தம் 64 எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் 21 உயிர் எழுத்துக்கள் என்று சொல்லப்படும். எழுத்துக்களை மூன்று வகையாக உச்சரிக்கலாம். அவை முறையே உதத்தா, அனுதத்தா ஸ்வரிதா ஆகும். எழுத்துக்கள் தோன்றுமிடம் எட்டாகும். அவையாவன: மார்பு, தொண்டை, தலை, அடிநாக்கு, பற்கள், மூக்கு, உதடு, மேலண்ணம் ஆகியவை ஆகும். உச்சரிப்புகள் சுத்தமாகவும், பிறர் கேட்கும் படியாகவும் இருக்க வேண்டும். மூக்கால் பேசுவதோ, முணுமுணுப்பதோ கூடாது. கவிதைகளில் பயன்படும் அணிகள் பற்றி அக்னி புராணம் விரிவாகப் பேசுகிறது. கவிதை என்பது சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றினின்று வேறாகும். சாத்திரங்கள் என்பவை உரைநடையில் எழுதப்பட்ட சொற்களால் நிறைந்தவை. இதிகாசங்கள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ஆனால் இவை கவிதை அல்ல. தூய்மையான உண்மையான மனிதர்களை இவ்வுலகில் காண்பது கடினம். தூய்மையான ப.பு.-25