பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 பதினெண் புராணங்கள் மனிதர்களைக் கண்டாலும், அவருள் கற்றவர்களைக் காண்பது அரிது. தூய்மையும் கல்வியும் உள்ளவர்களிடையேயும் கவிதை உணர்ச்சி உடையவர்களைக் காண்பது கடினம். கவிதை உணர்ச்சி இருந்தாலும் கவிதை இயற்றும் ஆற்றல் உடையவர்களைக் காண்பது அரிது. கவிதை இலக்கணம் தெரியாமல் கவிதை இயற்றுவது கடினம். கவிதை இலக்கணத்தைவிட கவிஞனுக்கு அதிகம் தேவைப்படுவது உணர்ச்சிப் பெருக்கு. சமஸ்கிருதம் தேவபாஷை, பிராகிருதமே மக்கள் பேசும் பாஷை, கவிதை கத்யம், பத்யம், மிஸ்ரை என்று மூன்று வகைப்படும். இதிகாசம் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட வேண்டும். ஒரளவு பிராகிருத சொற்கள் கலப்பதால் தவறில்லை. அவை காண்டம் அல்லது சர்க்கங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ரசங்களில்லாத இலக்கியம் பயனற்றது. அவை ஒன்பது வகைப்படும். அவையாவன: ஹாஸ்யம், கருணா, ரெளத்ரம், வீரம், பயனகா, பீபத்ளலா, அற்புதம், சிருங்காரம் என்பவை ஆகும். ரசங்கள் பயன்படுத்தப்படும் பொழுது அவை உணர்ச்சியோடு கலந்திருக்க வேண்டும். உணர்ச்சியோடு கலந்த ரசபாவம் இல்லாத இலக்கியம் இரண்டாம் தரம் ஆகும். சில இடங்களில் கவிஞனுடைய சாதுரியத்தால் ரசபாவத்தில் கூடப் பல நுணுக்கங்களைக் காட்டலாம். அறுபத்து நான்கு கலைகள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் பெண்களோடு சம்பந்தப்பட்டவை. ஆடல், பாடல், இசைக்கருவிகள் இயக்குதல் முதலியவை இக்கலைகளுக்குள் அடங்கும். பிரளயங்கள் குறிப்பிட்ட காலத்தில் பிரளயங்கள் வந்து போகின்றன. நாலாயிரம் யுகங்களுக்குப் பிறகு பிரளயம் தோன்றுகிறது. நூறு