பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/416

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அக்னி புராணம் 387 ஆண்டுகளுக்கு மழை இன்மையால் உயிர் வர்க்கங்கள் மடிகின்றன. விஷ்ணுவின் ஏவலால், சூரியன் சமுத்திரத்தின் நீரை வற்றச் செய்கிறான். ஏழு சூரியன்கள் ஆகாயத்தில் தோன்றி மூன்று உலகங்களையும் எரிக்கின்றனர். பெரும் பாம்பின் மூச்சுக்காற்றும் எஞ்சியவற்றை எரிக்கின்றது. மூன்றுலகமும் எரிந்து அனைத்தும் சம நிலையான பொழுது, கருமேகங்கள் தோன்றி விடாது மழை பொழிகின்றது. நூறு வருடங்களுக்கு விடாது மழை பொழிகிறது. விஷ்ணுவின் மூச்சுக் காற்றிலிருந்து, புயல் காற்று உருவாகி மேகங்களை விரட்டுகிறது. எங்கும் நீரே நிறைந்திருப்பதால், விஷ்ணு நீரின் மேல் உறங்குகிறார். ஒரு கல்பம் முழுவதும் உறங்கிய விஷ்ணுவிடம் முனிவர்கள் வந்து மூன்று உலகங்களையும் படைக்குமாறு வேண்டுகின்றனர். கீதை பூரீகிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த கீதையின் சாரத்தை அக்னி புராணம் இங்கு பேசுகிறது. இப்பூத உடம்பு இருப்பதால் மகிழ்ச்சி அடைவதற்கோ, இவ்வுடம்பு அழிந்து விட்டால் துக்கப்படுவதற்கோ எவ்விதக் காரணமும் இல்லை. ஆன்மா அழிவதும் இல்லை, தேய்வதும் இல்லை. அழிக்கப்படாதது. அது சிரஞ்சீவித்துவம் உள்ளது. ஆத்மனைப் பற்றி யாரும் அழத் தேவையில்லை. ஆத்மன் அதை விரும்புவதும் இல்லை. பொறிபுலன்களுக்கு அடிமைப் பட்டவர்கள் இந்த உண்மையை அறிய முடியாது. ஆத்மாவை அறிந்தவன் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதில்லை. ஆத்மா எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதும் இல்லை. லாப நஷ்டம் எதையும் பெறுவதும் இல்லை. இந்த உண்மையை அறிவது மாயையாகிய வெள்ளத்தில் இருந்து தப்புவதற் குரிய கருவியாகும். இந்த அறிவு செயலிலிருந்து ஆத்மாவை