பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 38.9 தன்னை யாருக்குத் தன் தந்தை கொடுத்திருக்கிறான் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். இதனால் கோபம் கொண்ட வஜ்ஜிரவா, உன்னை யமனுக்குக் கொடுத்து விட்டேன்' என்று கூறினான். தந்தையின் பதிலைக் கேட்ட மகன் யமனுடைய உலகிற்குச் சென்றான். அங்கு மூன்று நாட்கள் தங்கி யமனைப் பார்த்தான். அங்கு சென்ற யாரும் மீண்டும் பூலோகம் திரும்பியதில்லை. ஆனால் நச்சிகேதாவைக் கண்ட யமன், மனமகிழ்ந்து அவன் மீண்டும் பூலோகம் செல்ல வரம் கொடுத்தான். ஆனால் அதை விரும்பாத நச்சிகேதா, யமனிடம் ஆத்மாவைப் பற்றிய உண்மை இயல்பைத் தெரிந்து கொள்ள அவனை வேண்டினான். யமன் நச்சிகேதாவிற்கு ஆத்மாவைப் பற்றிக் கூறியவையே யம கீதை' என்று வழங்கப்படுகிறது. யமன் கூறியதாவது: உலகத்தில் உள்ள மக்கள் நிலையில்லாத பொருள்களாகிய பதவி, பணம், வீடு என்பவற்றில் மயங்குவது வினோதமாக உள்ளது. ஞானிகள் இவற்றில் ஈடுபடக் கூடாது. இவற்றை நெருங்கவிடக் கூடாது. பழகிவிட முடியாத நிலையை அடையக் கூடாது என்று சொல்லியிருந்தும் மக்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. பரப் பிரம்மம் இவையனைத்தையும் பெற்றிருக்கிறது. ஆனால் இவற்றோடு ஒவ்வொருவரும் இதனைக் காண முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் அது ஊடுருவி நிற்கின்றது. ஆத்மா என்பது இவ்வுடம்பினுள் உறைகின்றது என்றாலும், இவ்வுடம்பே ஒரு ரதமாகவும், அறிவு ரதத்தைச் செலுத்துபவனாகவும், மனம் என்பது கடிவாளமாகவும் உள்ளது. ஐந்து பொறிபுலன்களும் குதிரைகளாக உள்ளன. இதனை ஏறிச் செலுத்தும் ஆத்மா ஐந்து குதிரைகளையும் அடக்கி, போர் வீரனைப் போல் தன்னுடைய மெய்யறிவை அம்பைப் போல பரப் பிரம்மத்திடம் செலுத்த வேண்டும். உண்மையான ஞானிகள் ஆத்மாவிற்கும், பரப் பிரம்மத்திற்கும்