பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 பதினெண் புராணங்கள் ஏனைய புராணங்கள் போல் இல்லாமல், பல்வேறு விரதங்கள் காயத்ரி மந்திர மகிமை வேதப் பயிற்சி என்ப வற்றைக் கூறுவதுடன் நான்கு வர்ணங்கள், அவர் களுக்குள் மணம் செய்து கொள்கின்ற முறை பாம்புக்கடி விஷத்தை இறக்குதல், கலி காலத்தில் அரசர்களின் வம்சாவளி என்பவற்றைச் சொல்கிறது. குப்த மன்னர்கள் வம்சாவளி பற்றிச் சொல்லும் இப்புராணம் அதற்கு முன்பு உள்ளவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சாகதுவிய பிராமணர்கள் பற்றியும், அவர்களை எங்கிருந்து யார் இங்கு கொண்டு வந்தார்கள் என்பது பற்றியும் அவர்கள் பழக்க வழக்கம் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. சூரிய வழிபாட்டில் சிறந்து நின்ற மகப் பிராமணர்களைப் பற்றி இப்புராணம் விரிவாகப் பேசு கிறது. இங்கு வந்தபின் கிருஷ்ணனுடைய விருப்பப்படி இந்த பிராமணப் பெண்கள் யாதவர்களை மணந்து கொண்டார்கள் என்று இப்புராணம் பேசுகிறது. இந்தப் புராணம் பழைய விவிலியத்தில் உள்ள ஆதாம் ஏவாள் கதை என்பவற்றில் தொடங்கி இஸ்லாமிய மன்னர்கள், மொகலாய மன்னர்கள் பிருத்விராஜன் கதை, கபீர் குரு நானக் வரலாறு என்பவற்றுடன் பிரிட்டிஷ் பாராளுமன்ற விக்டோரியாராணியார் ஆகியவர் பற்றிப் பேசுகிறது. இப்பெயர் கொண்ட பழைய புராணம் என்று அழிந்தது என்று தெரியவில்லை. அதில் உள்ள சில பாடல்கள் சில பெளராணிகர்களின் நினைவில் இருந் திருக்க வேண்டும். இந்த ஒரு புராணத்தில் தர்ம சாஸ்திரங்களுக்கும், வர்ணாசிரம தர்மங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது போல் வேறு எந்தப் புராணத்திலும் இல்லை. முன்னுரையில் கூறப்பட்டுள்ளது போல் குப்தர் சின் காலத்தில் பி திக்கம் தூக்கிநின் பொழுது இப்புராணம் இயற்றப்பெற்றிருக்க வேண்டும்.