பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 397 பேசாமலேயே உண்ணுவர். வாயின் தூய்மை கெடாதபடி வாய்க்கு மேல் ஒரு துணியைக் கட்டி, அசுத்தம் பாடாதபடி, அத்துணியைத் தொங்க விட்டனர் என்று இவர்களைப் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது. இக்கதையின் உட்பகுதியில் இரண்டு மகப்பிராமணர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது வகை மகப் பிராமணர்கள், சூரியனுக்கு பதிலாக அக்னியை வழிபட்ட வர்கள் ஆவர். இந்தப் பரம்பரைகளின் தொடக்கம் ரிஜ்வா என்ற முனிவனில் இருந்து துவங்குகிறது. ரிஜ்வா சிறந்த அக்னி பக்தன். எனவே அவன் பரம்பரையில் வந்தவர்கள் வேதம் முதலானவற்றை நன்கு அறிந்திருந்ததோடு வீட்டில் அக்னி வளர்த்து அதனை வணங்கும் பழக்கம் உடையவர்கள். (பவிஷ்ய புராணம் குறிப்பிடும் இந்த 2ஆம் வகை மகப்பிராமணர்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, இரானிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து அக்னி வழிபாட்டை விடாது பின்பற்றி வரும் பார்ஸிக் களை நினைவூட்டுவதாக இருக்கிறது. இவர்களும் பூணுாலை இடையில் அணிபவர்கள் ஆவார்கள். வேத வழிபாட்டுக் காரர்களுக்கும் அக்னி முக்கியமான தெய்வம் என்றாலும், அக்னிக்கு மேல் வருணன், இந்திரன் என்ற தெய்வங்களை ரிக் முதலான வேதங்கள் போற்றும். ஆனால் பார்ஸிக்கள், அக்னியையே எல்லாமாக நினைந்து வழிபடுகின்றவர்கள். பவிஷ்ய புராணம் கூறும் இரண்டாவது வகை மகப்பிராம ணர்கள் இவர்களாகத்தான் இருக்கவேண்டும். அப்படியானால் குப்தர்கள் காலத்தில் இந்து சமயத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் இப்புராணங்கள் எழுதப்பட்ட பொழுது பார்ஸிக்களையும், இந்துக்கள் என்றே சேர்த்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது. காரணம், வேத வழிப்பட்ட வைதிகர்கள், இரான் நாட்டிலிருந்து வந்த மகப்பிராமணர்கள் ஆகிய இருவருக்கும் அக்னி முக்கியமானதாகக் கருதப்பட்டதே காரணம்)