பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பதினெண் புராணங்கள் மூன்றாவது தொகுதியினர் சூரிய வழிபாட்டில் முன்னர் குறிப்பிட்ட இரண்டு மகப்பிராமணர்கள் போக மூன்றாவதாக உள்ள தொகுதி போஜகர்கள் எனப்படுவர். போஜகப் பிராம னர்களைப் பற்றி இப்புராணம் விரிவாகப் பேசுகிறது. இவர்களும் சகதுவீபத்தில் இருந்தவர்களே ஆவர். இரண்டாவது மகப்பிராமணர்களைப் பற்றி பவிஷ்ய புராணம் கூறுவதை வைத்துப் பார்த்தால் சகதுவீபம் என்பது இக்காலத்திய இரானிய நாட்டைக் குறிக்கும் என்று கொள்ளலாம். போஜகப் பிராமணர்கள் பூணுாலை எப்பொழுதும் அணிந்திருக்க வேண்டும். இவர்கள் இடமிருந்து வலம் அணிந்திருக்கும் பூணுாலில் மேல் பகுதியில் சிவனும் நடுப்பகுதியில் பிரம்மனும், அடிப்பகுதியில் விஷ்ணுவும் இருப்பதாகக் கருதினார்கள். இந்தப் பூணுவிலேயே சகல வேதங்களும், சகல ஜீவராசிகளும் அடங்கி உள்ளன என்று கருதப்படுகிறது. எனவே பூணுாலை அணியாதவன் தாழ்ந்தவனாகி விடுகிறான். பூணுாலை எடுத்து விட்டவன் போஜகப் பிராமணன் என்று கருதப்பட்டான். இவர்கள் ஒவ்வொரு முறையும், உணவைச் சமைத்து உண்பதற்கு முன் சூரியனுக்கு நிவேதனம் செய்துவிட்டுத்தான் உண்பார்கள். மூன்று வேளை குளித்து, ஐந்து வேளை சூரியனை வணங்குவது என்பவை போஜகப் பிராமணர்களுக்கு இன்றியமையாதவைகளாகும். பவிஷ்ய புராணம் போஜகர்களின் பெருமையை வானளாவப் புகழ்கிறது. நாளாவட்டத்தில் இந்த போஜகப் பிராமணர்கள் மற்ற எல்லோரையும் விட மிக உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டார்கள். ஒரு நல்ல மனைவி கணவனுக்குப் பணிவிடை செய்வது போல, இந்தப் போஜகர்கள் சூரியனுக்குப் பணிவிடை செய்தனர். வேதத்திற் சிறந்தது வேறு இல்லை, கங்கையிற் சிறந்த நதியுமில்லை, அசுவமேதத்தைவிடச் சிறந்த யாகமில்லை, ஒர் ஆண் குழந்தை பிறப்பதைவிட மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை, சூரியனைவிடச் சிறந்த தெய்வமு