பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பதினெண் புராணங்கள் முடியும். ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் என்பவர்கள் மாறுவார்கள். வைவஸ்வத மனுவின் ஆட்சியில் நடைபெறும் இந்தக் கலியுகத்தில் அத்ரி, வசிஷ்டர், காசியபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் மற்றும் ஜமதக்கினி ஆகிய எழுவரும் இந்த மன்வந்திரம் முழுதும் இருப்பவர்கள் ஆவர். இதற்குரிய தேவதைகள், சத்தியர்கள். ருத்ரர்கள், விஸ்வதேவர்கள், வசுக்கள், மருத்துகள், ஆதித்தியர்கள் மற்றும் இரண்டு அஸ்வினிகள். வைவஸ்வத மனு பரம்பரை சூரியனுக்கும், விஸ்வகர்மாவின் மகளுக்கும் பிறந்த முதல் குழந்தை வைவஸ்வத மனு எனப்படும். இந்த மனுவிற்கு நீண்ட காலம் குழந்தைப் பேறு இன்மையால் அவன் ஒரு பெரிய யாகத்தை நடத்தினான். அதன் பயனாக இக்சுவாகு முதலிய ஒன்பது பேர் மைந்தர் களாய்த் தோன்றினர். இக்சுவாகுவிற்கு நூறு மைந்தர்கள் தோன்றினர். ஒரு யாகம் நடத்துவதற்காகக் காட்டில் சென்று ஒரு மிருகத்தை வேட்டையாடி அதன் உடலைக் கொண்டு வருமாறு இக்சுவாகு முதல் மகனான விருக்சி'யை ஏவினான். காடு சென்று வேட்டையாடிய விருக்சி அதிகம் பசித்தமையால் அவ்வேட்டை மிருகத்தின் ஒரு பகுதியைத் தான் தின்றுவிட்டான். எச்சிலான பாகத்தைக் கொண்டு வந்தமையின் இக்சுவாகு அவனை நாடு கடத்திவிட்டான். இக்சுவாகு இறந்தபின் நாடு கடத்தப்பட்ட விருக்சி மீண்டு வந்து நாட்டை ஆட்சி செய்தான். இவன் ஆட்சி செய்த பகுதிக்கு அயோத்தி என்பது பெயர். விருக்சியின் மைந்தர்களுள் ஒருவனாகிய காகுஸ்தன் பரம்பரையில் தோன்றியவனே பிரசித்தி பெற்ற இராமன் ஆவான்.