பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 பதினெண் புராணங்கள் விக்கிரகங்கள், பின்வரும் உலோகங்களால் செய்யப் பெறலாம். தங்கம், வெள்ளி, தாமிரம், மண், கல், மரம், எட்டு உலோகங்கள் ஆகியவை. தெய்வப்படிமங்கள் செய்தற்குரிய மரங்கள்: தேவதாரு சந்தனம், வில்வம், மா, வேம்பு, பலா, சிவப்பு சந்தனமரம் ஆகியவை. சூரிய விக்கிரகம் கீழ்க்கண்டவாறு செய்யப்பெற வேண்டும். விக்ரகம் 84 அங்குல உயரமும், முகம் 12 அங்குல நீளமும் இருக்க வேண்டும். முகத்தில் மூன்றில் ஒரு பங்கு தாடை அமைக்க வேண்டும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கில் மூக்கும், நெற்றியும் அமைக்கப்படவேண்டும். கண்கள் இரண்டு அங்குல நீளமும், ஒரு அங்குல விழித்திரையும் உடையதாக இருக்க வேண்டும். விழித்திரையில் மூன்றில் ஒரு பங்கு அளவு கருவிழி அமைக்கப்பெறவேண்டும். கைகள், கால்கள், முன்னங்கைகள், தொடைகள் சம அளவாக இருக்க வேண்டும். பாதம் ஆறு அங்குல நீளமும், நான்கு அங்குல அகலமும் கொண்டிருக்க வேண்டும். மார்பு, தொடை, கண்புருவம், நெற்றி, மூக்கு, கன்னம் ஆகியவை சற்றுத் துருத்திக் கொண்டிருக்க வேண்டும். கண்கள் பெரியவையாகவும், உதடுகள் சிவப்பாகவும், முகம் தாமரை மலர் போன்றும் இருக்க வேண்டும். விக்கிரகத்தில், ஆபரணங்கள், காதணிகள், பூணுரல், மாலைகள், கிரீடம் ஆகியவை அணியப் பெற வேண்டும். கைகளில் தாமரை மலரும், பொன்னால் ஆன மணிமாலையும் இருக்க வேண்டும். பிராமணனும், பூதமும்: முன்னொரு காலத்தில் விதிவர நகரத்தில், வேத்ரவதி நதிக்கரையில் ஒரு பூதம் படுத்திருந்தது. அங்கு வந்த பிராமணன் அப்பேயைப் பார்த்தான். கடுமையான வெயிலின் காரணமாக அப்பேயின் உடலில் கட்டிகள் நிறைய இருந்தன. அப்பேய் தாகம் மிகுதியால் நீர் வேண்டும் என்று அழுதுகொண்டிருந்தது. இதனைக் கண்ட பிராமணன் மனம்