பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 403 வருந்தி, “நீ ஏன் இவ்வாறு சித்திரவதைப்படுகிறாய்?" என்று கேட்டான். உடனே அப்பேய் தன் கதையைக் கூற ஆரம்பித்தது. என்னுடைய முன் ஜென்மத்தில் rலபத்ரா என்ற பெயருடைய வைசியனாகப் பிறந்தேன். விதிஷா என்ற நகரில் வாழ்ந்து வந்தேன். மிகுந்த பொருள் வசதி கொண்ட நான், அவற்றி னிடத்துப் பெரிதும் பற்று வைத்திருந்ததால், அவற்றை இழக்க மனம் வராமல் யாருக்கும் எந்த தான தர்மமும் செய்யாமல் இறந்தேன். என்னுடைய குடும்பத்தினரை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். என்னுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ நான் சிறிதும் மதிக்கவில்லை. இறைவனை வழிபடுவதையே மறந்து, எக்காலமும் என் செல்வத்தினைக் காப்பதிலேயே என் பொழுதினைக் கழித்தேன். அதனால் என்னுடைய மரணத்திற்குப் பிறகு நான் தண்டனை அனுபவிக் கிறேன். இந்தக் கடும் வெயிலில், இந்த மண் வெளியில் என் உடம்பை வருத்திக்கொள்ள வேண்டியுள்ளது. என்னால் இக் கொடுமையைத் தாங்க முடியவில்லை. தயவு செய்து எனக்கு உதவி செய்வாயாக’ என்று கேட்டது. உடனே பிராமணனும், "பத்து வருடங்களாகச் சுக்ர துவாதசி விரதம் இருந்து, நான் புண்ணியம் சேர்த்துள்ளேன். அதில் செலவழிந்தது போக, மீதமுள்ளதை உனக்கு உரிமை மாற்றிக் கொடுக்கிறேன். அதைக் கொண்டு நீ விடுதலை பெறுவாய்” என்று கூறி அவ்வாறே செய்திட, பூதமும் விடுதலை பெற்று சுவர்க்கத்தை அடைந்தது. பவிஷ்ய புராணம் மேலும் சில விரதங்கள் பற்றிப் பேசுகிறது. புண்ணிய நதிகளாகிய கயை, புஷ்கரா, வாரணாசி, பிரயாகை ஆகியவற்றில் சென்று நீராடுவதில் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும், உபய-துவாதசி விரதம் இருப்பதால் மிகுந்த புண்ணியம் கிடைக்கிறது. திலகவிரதம் இருந்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டால் பகைவர்களும், தீய ஆவிகளும் ஒருவரை அணுகா. ஜதீஸ்மரா