பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 பதினெண் புராணங்கள் படுத்தி வணங்கினால் குழந்தைப் பேறு கிடைக்கும். சிவனுடைய விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்தி, மந்திரம் கூறினால் நினைத்த காரியம் நிறைவேறும். 2. அசோக விரதம் : அசோக மரத்தினை வணங்கி வந்தால் வாழ்ச் ன் சோகங்கள் விலகிவிடும். 3. கோஷ்பாத திரிதிய விரதம் : சுக்கிலபட்சம் மூன்றாம் நாள் பத்ரபத நட்சத்திரம் விண்ணில் இருக்கும் நாள் அனுஷ்டிக்கப்படும். எண்ணெய், உப்பு சமைத்த உணவு ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். கோலோகா என்ற உலகை அடைய, இவ்விரதம் துணைபுரியும். 4. கோவத்ஸ் துவாதசி விரதம் : கார்த்திகை மாதம், கிருஷ்ணபட்சம் பன்னிரண்டாம் நாள் பசுவுடன், அதன் கன்றையும் சேர்த்து வணங்குவர். இவ்விரதம் இருப்பவர், தரையில் படுத்துறங்க வேண்டும். கோலோகா என்ற உலகை அடைய இவ்விரதம் கடைப்பிடிக்க வேண்டும். 5. உய்கதுவாதசி விரதம் : மார்கழி மாதத்தில், பன்னிரண்டாம் நாள் விஷ்ணுவை வழிபட்டால் காது கேளாமை, வாய் பேசாமை, தொழுநோய் ஆகியவற்றி னின்று விடுபடலாம். 6. சரஸ்வதி விரதம் : பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரஸ்வதியைத் தொழுது, தொடர்ந்து தலைசிறந்தவனாக விளங்கலாம். 7. அசுன்ய சயன விரதம் : பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை- இவ்விரதம் இருந்து எல்லா தெய்வங்களுக்கும் இனிப்பு, பழம் முதலியன கொடுத்து வணங்கி வந்தால், கணவன் மனைவி என்றும் பிரியாது ஒற்றுமையாய் இருப்பர். மேலே கூறியவற்றோடு, மேலும் சில விரதங்கள் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. ஒருவருக்கு தானம் செய்வதினால் செல்வம் என்றுமே வீணாவதில்லை. நிலையில்லாதது செல்வம். ஒருவர் இறந்த பிறகு எவ்விதப் பயனுமற்றது. ஆதலால், உயிருடன் இருக்கும்பொழுதே அவற்றை