பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/438

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பவிஷ்ய புராணம் 409 ஊதியம் : ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் வேலையின் முக்கியத்துவத்தைப் பொறுத்து ஊதியம் கணக்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. மிகக் குறைந்த அளவு ஊதியம் வரதா எனப்படும். இருபது வரதாக்கள் ஒரு ககிணி எனப்படும். நான்கு ககினிக்கள் ஒரு பாணா எனப்படும். பவிஷ்ய புராணம், வேலையின் தரத்திற்கேற்ப, ஒரு வேலையின் தினக் கூலியைக் கீழே கண்டவாறு கொடுத் துள்ளது. அவற்றுள் சிலவற்றைத் தந்துள்ளோம். கிணறு வெட்ட-2 பாணா, செங்கல் அடுக்க-2 பாணா, பருத்தி ஆடைகள் நெய்ய-3 பாணா, கம்பளி ஆடைகள் நெய்ய-10 ககினிகள் முடிவெட்ட-10 ககினிகள் நெல்விதைக்க-1 பாணா, வாகனம் இழுக்க-1 பாணா, பாலம் கட்ட-2 பாணா சலவைக் கற்கள் பதிக்க-1 பாணா. பெண்களும், திருமணமும்: பெண்களுக்கு விரைவில், திருமணம் செய்து விடவேண்டும் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. ஏழு வயதுடைய பெண்ணை கெளரி என்றும், பத்து வயதுடைய பெண் நக்னிகா என்றும், பன்னிரண்டு வயதுடைய பெண் கன்யகா என்றும், அதற்கு மேல் வயதுடையவர்களை ரஜஸ்வலா என்றும் குறிப்பிடுகிறது இப்புராணம். திருமணத்தில் எட்டு வகைகள் உள்ளன. அவை Η ΗΤώΥ 16δΤ : 1. பிரம்மம் : இம்முறைத் திருமணத்தில் பெண்ணுக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து நல்ல ஆபரணங்கள் பூட்டி கல்வி அறிவில் சிறந்து விளங்கும் மணமகனுக்குத் திருமணம் செய்து வைப்பர்.