பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/439

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


410 பதினெண் புராணங்கள் 2. தெய்வ மணம் : ஆபரணங்கள் அணிந்த பெண், நல்லொழுக்கம் நிறைந்த மணமகனுக்கு சாத்திர சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, புரோகிதர்கள் யாகம் வளர்க்க, மணம் செய்து கொடுக்கப்படுவாள். 3. அர்ஷ மணம் : இதன்படி, சடங்குகள் அனைத்தும் நடைபெற்றபின், பெண்ணின் தந்தை, மணமகனிடம் தன் மகளை ஒப்படைப்பார். பசு அல்லது எருதினை மணமகனுக்கு தானமாக அளிப்பார். 4. பிரஜாபத்ய மணம் : இத்திருமணத்தில், தந்தை தன் மகளை மணமகனிடம் திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, மதச்சடங்குகள் செய்யும்பொழுது அவர்கள் இணை பிரியாது செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி, மகளை மணமகனுடன் அனுப்பி வைப்பர். 5. அசுர மணம் : மணமகனிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே மணமகளின் தந்தையும், உறவினரும் அவருக்குத் திருமணம் செய்து வைப்பர். 6. கந்தர்வ மணம் : ஒர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி, மணம் புரிந்து கொள்ளுதல். 7. ராகூடிச மணம் : ஒரு பெண்ணைக் கவர்ந்து சென்று திருமணம் புரிந்து கொள்ளுதல். 8. பிசாசு மணம் : பெண்ணின் சம்மதமில்லாமல், அவளைக் கட்டாயப்படுத்திக் கவர்ந்து சென்று மணந்து கொள்ளுதல். திருமணத்திற்குப் பின்னர், ஒரு பெண் தன் கணவனின் குடும்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தன் கணவனை தெய்வமாக நினைக்க வேண்டும். பவிஷ்ய புராணக் கூற்றுப்படி மனைவி, கணவனின் உடம்பின்