பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 பதினெண் புராணங்கள் விவாகரத்து ஏற்பட்டால், அப்பெண்ணின் சீதனப் பொருட்கள், நகைகள் மற்றும் அவளுடைய பொருட்களைத் திருப்பி அவளிடமே தந்துவிட வேண்டும். தவிர கணவனிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் உரிமையும் பெறுகிறாள். ஒருவனுக்கு இரண்டாவதாக ஒரு மனைவி இருப்பா ளெனில், அவன் மூத்த மனைவியைத் தன் தாயைப்போலப் பேண வேண்டும். தன்னுடைய இல்லத்தினின்று கொண்டு வந்தது எதுவாயினும், அதனை மூத்த மனைவிக்கே முதலில் கொடுக்க வேண்டும். இவர்கள் இருவரிடமும் பொறாமை ஏற்படும்படிக் கணவன் நடந்து கொள்ளக் கூடாது. பவிஷ்ய புராணம், மேலும் சில சுவாரஸ்யமான நிகழ்ச்சி களைக் கூறுகிறது. வெவ்வேறு மலர்களை வெவ்வேறு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கும் பொழுது ஏற்படும் பலன்கள் ஆகியவற்றைக் கூறுகிறது. இதை அடுத்து, இப்புராணம் எதிர்காலம் பற்றிப் பேசுகிறது. இப்புராணத்தின் மூன்றாவது பிரிவு பிரத்திசமுகம். வரலாற்றுச் சிறப்புகளைக் கூறுகிறது. மனு அரியணை ஏறியது முதல் முடிவில் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்தது பற்றியும், ராணி விக்டோரியா அரசாண்டது பற்றியும் பேசுகிறது. சூரியவம்சம், சந்திரவம்சத்தில் வந்தவர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெகு காலத்திற்குப் பின்பு வந்த ராஜபுதன அரசர்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. பாபர், ஹாமாயூன், அக்பர். சலீம், ஒளரங்கசீப், சிவாஜி ஆகியோர் பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆங்கில வார்த்தைகளான ஜனவரி, பிப்ரவரி போன்ற சொற்களும் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து கலியுகம் பற்றி இப்புராணம் பேசுகிறது. நான்கு யுகங்கள், அவற்றின் கால அளவுகள்