பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 பதினெண் புராணங்கள் 3. பிருகதரதாஸ் : இப்பரம்பரையில் வந்தவன் ஜரா சந்தன், கத பேரரசன். இவன் வழியில் வந்த சேனஜித் மன்னன் காலத்தில் இப்பகுதி எழுதப்பட்டது. இவனுக்குப் பின் பதினாறு அரசர்கள் ஆட்சி செய்வார்கள். 723 ஆண்டுகள் இவர்கள் ஆட்சி நடக்கும். அதன் பிறகு 32 பிருகதரதாஸ் 100 ஆண்டுகள் ஆட்சி புரிவர். 4. பிரத்யோதாஸ் : பிருகதாஸ்க்குப் பிறகு புலிகா தன் தலைவனைக் கொன்று, தன் மகன் பிரத்யோதாஸை அரசனாக்குவான். இவனுக்குப் பின்வரும் அரசர்களும் சேர்த்து பிரத்யோதா மன்னர்கள் 138 வருடம் இப்பூமியை ஆள்வர். 5. சிஷனாகாஸ் : சிiனாகா, பிரத்யோதாஸை அழித்து தானே அரசனாவான். பிம்பிசாரா, அஜாத சத்ரு போன்றோர் ஆட்சி புரிவர். இவர்கள் பதின்மர், நூற்றி அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்வர். 6. நந்தன் : இவ்வரசன், தன்னுடைய சூத்திர மனைவியின் மகனை அரசனாக்குவான். அதன் பிறகு சத்ரியர்கள் அழிக்கப் பட்டு, சூத்திரர்களே அரசாள்வர். இறுதியில் கெளடில்யா என்ற பிராமணர் நந்தர்களை ஒழிப்பார். நந்தர்கள் 100 ஆண்டுகள் ஆண்டபின், மெளரியர்கள் ஆள்வர். 7. மெளரியர் : கெளடில்யர் சந்திரகுப்தரை நியமித்து, மொத்தம் 9 மெளரியர்கள் 137 ஆண்டுகள் அரசாட்சி செய்வர். 8. சுங்கர் : மெளரியரை அடுத்து இவர்கள் அரசாட்சிக்கு வருவர். பிருகதரதா அரசனைத் துரத்திவிட்டு, படைத்தலைவன் புஷ்யமித்ரா புதிய ஆட்சியை உருவாக்குவான். பத்து சுங்கர்கள் 112 ஆண்டுகள் ஆண்டபின் கன்வர்கள் பூமியை எடுத்துக் கொள்வர்.