பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 பதினெண் புராணங்கள் வரம் பெறுவர். பன்னிரு மாதங்களில், ஒவ்வொரு மாதத் திலும் சூரியன் வெவ்வேறு பண்புகளுடன் தோன்றுகிறான். இவற்றோடு மட்டுமல்லாது, சூரியனுக்கு இன்னும் பன்னிரு பெயர்களும் உள்ளன. அவையாவன: ஆதித்யா, சவிதா, சூரிய, மிகிரா, அர்கா, பிரபாகரா, மார்த்தாண்டா, பாஸ்கரா, பானு, சித்திரபானு, திவாகரா, ரவி ஆகியவை ஆகும். ஆர்யமா ரூபத்தில் சூரியனுக்கு முந்நூறு கதிர்களும், வைவஸ்வன ரூபத்தில் ஆயிரத்து நானூறு கதிர்களும், அமுகூவி ரூபத்தில் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களும், பர்ஜன்ய, வருண, விஷ்ணு ரூபங்களில் ஒவ்வொன்றிற்கும் ஆயிரத்து நானுறு கதிர்களும், இந்திரனுக்கு ஆயிரத்து இருநூறு கதிர்களும், தத்தா ரூபத்தில் ஆயிரத்து நூறு கதிர்களும், மித்ரா ரூபத்தில் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களும், புஷா ரூபத்தில் ஆயிரம் கதிர்களும், பகா ரூபத்தில் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களும், துவஷ்டா ரூபத்தில் ஆயிரம் கதிர்களும் கொண்டுள்ளான். சூரிய தேவனின் ரதம் சூரிய தேவனின் ரதம் தங்கத்தினால் செய்யப் பெற்றது. இதனை பிரம்மாவே வடிவமைத்தார். இந்த ரதத்தின் சாரதி அருணன் எனப்படுவான். இந்த ரதத்தை ஏழு பொன் குதிரைகள் இழுத்துச் செல்லுகின்றன. அவை காயத்ரி, திருஷ்டுபா, ஜகதி, அனுஷ்டுபா, பம்கிதி, விருஹதி, உஷ்னிகா கந்தர்வர்கள், இரண்டு அப்ஸரஸ்கள், இரண்டு பாம்புகள், இரண்டு ராட்சசர்கள் எப்பொழுதும் ரதத்தில் பயணம் செய்கின்றனர். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சித்திரை, வைகாசி மாதங்களில், தத்தா, ஆர்யமா ஆதித்தியர்களும் புலஸ்தியா, புவஹா முனிவர்களும் தும்புரு நாரத கந்தர்வர்களும், கிருத்தஸ்தலி, புஞ்ஜிகஸ்தலா அப்ஸரஸ்