பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/448

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பவிஷ்ய புராணம் 419 சக என்ற பெயருடைய மரம் இங்கு வளர்கின்றது. இதனாலேயே இப்பகுதி சகதுவீபம் என்ற பெயர் பெற்றது. இந்த மரம் அனைவராலும் வணங்கப்பெறும். தேவர்களும், கந்தர்வர்களும் சகதுவீபத்தில் திறைந்திருக் கின்றனர். இங்கு ஏழு புனித நதிகள் உள்ளன. இவை புனிதத் தன்மையில் கங்கைக்கு இணையாகப் பேசப்பட்டாலும், வெவ்வேறு பெயர் கொண்டவையாகும். முதல் நதி சிவஜலா அல்லது அனுதப்தா என்றும், இரண்டாவது நதி குமாரி அல்லது வாசவி என்றும், மூன்றாவது நதி நந்தா அல்லது பார்வதி என்றும், நான்காவது நதி சிவேதிகா அல்லது பார்வதி என்றும், ஐந்தாவது நதி இr அல்லது கிரது என்றும்; ஆறாவது நதி தேனுகா அல்லது மிருதா என்றும் வழங்கப் படுகிறது. ஏழாவது நதியின் பெயர் கொடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன. புனிதத் தன்மை வாய்ந்த இந்த நீரே அனைவரின் தாகத்தையும் சகதுவீபத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. இங்கு வாழ்பவர்கள் தர்ம, ஞாயங்களுக்குக் கட்டுப்பட்டு நேர்மையாக வாழ்பவர்கள். பொறாமை, வெறுப்பு, துக்கம் எதுவுமின்றி வாழ்பவர்கள். முன்பே குறிப்பிட்டபடி, இங்குள்ள நான்கு பிரிவுகள் மகர்கள், மககர்கள், கனகர்கள், மந்தர்கள் எனப் படுவர். மகர்கள் பிராமணர்களாகவும், மககர்கள் கடித்திரியர் களாகவும், கனகர்கள் வைசியர்களாகவும், மந்தகர்கள் துத்திரர்களாகவும் கருதப்படுவர். இத்துவீபத்தில் வழிவழியாக வந்தோர் சூரிய தேவனை வணங்குபவர்கள். பல விரதங்கள் அனுஷ்டிக்கும் இவர்களுக்குச் சூரியதேவன் ஆசி என்றும் உண்டு. சகதுவீபா