பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 பதினெண் புராணங்கள் தசரதனின் முன்னோர் துரிய வம்சத்தில் தோன்றிய திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன். அவன் பரம்பரையில் வந்தவன் திலீபன். அவன் மகனாகிய பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்ததால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயரும் வந்தது. இவர்கள் வழியில் தோன்றியவன் ரகு. இவனுடைய பேரனே பிரசித்தி பெற்ற இராமனின் தந்தையாகிய தசரதன் ஆவான். பிரம்ம புராணப்படி சூரிய வம்ச மன்னர்களின் வம்சாவளிச் சுருக்கம் இதுவாம். சந்திர வம்சாவளி படைப்புக் காலத்தில் பிரம்மனுடைய எண்ணத்தில் தோன்றிய ஏழு பிள்ளைகளில் 'அத்ரி முனிவரும் ஒருவன் ஆவான். செய்தற்கரிய தவத்தை மேற்கொண்ட அவன் நீண்ட காலம் தவம் செய்தான். அத் தவத்தின் ஆற்றல் பெரும் சக்தியாக வெளிப்பட்டு விண்ணில் பரவியது. அவ்வாற்றலைத் தாங்கமாட்டாத ஆகாயம் அதனை மீண்டும் பூமியில் திருப்பியது. பூமிக்கு வந்த ஆற்றலில் ஒரு பகுதியே சந்திரனாகப் பரிணமித்தது. சந்திரனின் ஆற்றலைக் கண்ட பிரம்மன் தன்னுடைய ரதத்தில் அவனை ஏற்றிக் கொண்டு பூமியை 21 முறை வலம் வந்தான். அதன் பிறகு சோமனாகிய சந்திரன் நூறு பத்ம யுகங்கள் தவம் செய்தான். இத் தவத்தை மெச்சிய பிரம்மன் சோமனாகிய சந்திரனுக்கு உலகத்தில் உள்ள செடி, கொடி, மரங்களின் தலைமைப் பதவியும், பிராமணர்களின் தலைமைப் பதவியும், சமுத்திரங்களின் தலைமைப் பதவியும் கொடுத்தான். இவற்றையடுத்து சோமன் ராஜதுய வேள்வி நடத்தி எல்லையற்ற செல்வத்தைப் பெற்றான். இச் செல்வத்தின் வளர்ச்சி சோமனின் தலையை கணக்கச் செய்தது. அதிகார வெறி கொண்ட சோமன், தேவகுருவாகிய