பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 பதினெண் புராணங்கள் பாடல்கள், பிருகு முனிவருடன் கணேசன் நடத்திய உரையாடல் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. நான்காவது பாகம் கிருஷ்ண னுடைய பிறப்பு லீலைகள் என்பனவற்றை முக்கியமாகப் பேசுகிறது. பிரளய காலத்தில், எல்லாம் அழிந்து ஒரு ஒளிப்பிழம்பு ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் பேராற்றல் மூன்று உலகங்களையும் விழுங்கி வைத்திருந்தது. இந்த ஒளிப் பிழம்பின் மேலே வைகுந்தம், சிவலோகம், கோலோகதம் ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது, வைகுண்டம் நாராயணன், லட்சுமி என்பவர்கள் வாழுமிடமாக இருந்தது. பிரளய காலத்தில் வைகுந்தம் காலியாக இருந்தது. சிவலோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்திக் காலத்தில் காலியான நரகம், பிரளய காலத்தில் சிவன் பார்வதி என்பவருடன் சிவ கணங்களும் இருந்தனர். கோலோகம் என்று சொல்லப்படும் மூன்றாவது உலகம் கிருஷ்ணன் இருப்பிட மாகும். இந்த லோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்தி, பிரளயம் என்ற இரண்டு நேரங்களிலும் அது நிறைந்தே இருந்தது. - ஏனைய புராணங்களைப் போல் அல்லாமல், கிருஷ்ணனைப் பரப்பிரம்மத்துடன் ஒன்றாக்கும் முயற்சியில் வைகுண்டத்தையும், கோலோகத்தையும் வேறு வேறு என்று சொல்லி, இந்த வேறுபாட்டைக் கற்பிக்கின்றது. கோலோகம் முழுவதும் ஒளியாய் நிரம்பி இருப்பதுடன், அந்த ஒளியினுள் ஆபரணங்கள் அணிந்திருப்பது போன்ற பல வடிவுகளைக் கொண்டது. இந்த வடிவம் மஞ்சள் உடையுடுத்து, கையில் குழலுடன் காணப்படுகிறது. இந்த வடிவம் சந்தனம் பூசிய உடலுடன் கெளத்துப மணியை மார்பில் பதித்திருப்பதோடு, பூரீவத்ஸ் முத்திரையும் மார்பில் பெற்றுள்ளது. இவ்வடிவம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தில்