பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 பதினெண் புராணங்கள் ஞானம் அற்றவனாகவும், பணிப் பெண்ணின் மகனாகவும் பிறப்பாய்” என்று சாபமிட்டார். இதைக்கேட்ட நாரதர் பிரம்மனைப் பார்த்து "இனி மூன்று கல்பங்களுக்கு பிரம்மனை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று சாபமிட்டார். மற்ற முனிவர்கள் படைத்தல் தொழிலைச் செய்தனர். மரீச்சி யினின்று காசிப முனிவனும், அத்ரியிடமிருந்து சந்திரனும், பிரசேத்தா, புலஸ்தியர் ஆகியோரிடமிருந்து முறையே கெளதமரும், அகஸ்தியரும் தோன்றினர். இதையடுத்துக் கூறப்பட்டிருக்கும் மனு ஷடரூபாவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது உறவு முறைகள் இனி, பிரம்ம வைவர்த்த புராணம் உறவு முறைகள் பற்றிப் பேசுகிறது. பிரம்மன் மக்களிடையே சில உறவு முறை களை வரையறுத்தார். அவை பின்வருமாறு குறிப்பிடப் படுகின்றன. தந்தை, பிதா, ததா, ஜனகா என்றும், தாய், மாதா, அம்பா, ஜனனி என்றும், தந்தையின் தந்தை பிதா மகன் என்றும், தாயின் தந்தை மாதா மகன் என்றும் அழைக்கப்படுவர். தந்தையின் சகோதரி பித்ரிஷ்வசா என்றும், தாயின் சகோதரி மாசுரி என்றும் அழைக்கப்படுவர். புத்ரா, தயதா, தனபகா, வீர்யஜா என்பவை மகனைக் குறிக்கும் சொற்கள். துஹறிதா, கன்யா என்பவை மகளைக் குறிக்கும். வது என்பது மகனின் மனைவியையும், ஜமத்ரி என்பது, மகளின் கணவனையும் குறிக்கும். பதி, பர்த்தா என்பவை கணவனை யும், பத்ணி, பார்யா என்பவை மனைவியையும் குறிக்கும். மகனின் மகன் பெளத்ரன் என்றும், மகளின் மகன் தெளஹித்ரா என்றும் கூறப் பெறுவர்.