பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம புராணம் 17 பிரஹஸ்பதியின் மனைவியாகிய தாரையைக் களவாடிக் கொண்டு வந்துவிட்டான். இத் தீச்செயலுக்கு உடந்தையாக அரக்கர்களும் அவர்கள் குருவாகிய சுக்ராச்சாரியும் இருந்தனர். தாரைக்காக தேவர்களுக்கும், சோமனுக்கும் நீண்டகாலம் போர் நடந்தது. இறுதியாக பிரம்மன் தலையிட்டு தாரையை மீட்டு பிரஹஸ்பதியிடம் ஒப்பித்தார். தாரையை ஏற்றுக் கொண்ட பிரஹஸ்பதி, அவளுக்கும் சோமனுக்கும் பிறந்த பிள்ளையாகிய புதனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இந்த புதன்தான் இலாவை மணந்தவன் என்று முன்னரே குறிக்கப்பட்டுள்ளது. மன்னன் யயாதியின் பரம்பரை மன்னன் நகுவுனின் ஆறு பிள்ளைகளில் ஒருவனாகிய யயாதி, ஆட்சி மேற்கொண்டு உலகம் முழுவதையும் வென்றான். அவனுடைய ஐந்து மகன்களுக்கும் நாட்டை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நடுப்பகுதி என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சியை ஒப்பித்து விட்டு, உலகைச் சுற்றிப் பார்க்க நினைத்தான் யயாதி. உலகம் சுற்ற தன்னுடைய முதுமை இடையூறாக இருக்கும் என்று கருதிய யயாதி தன் மூத்த பிள்ளையாகிய 'யது'விடம் தன் முதுமையைப் பெற்றுக் கொண்டு அவன் இளமையைத் தருமாறு கேட்டான். அவனும், அவன் சகோதரர்கள் மூவரும் அவ்வாறு செய்ய மறுத்து விட்டனர். அவர்களையெல்லாம் சபித்து விட்டுக் கடைசிப் பிள்ளையாகிய புரு'விடம் கேட்டான். அவன் மகிழ்ச்சியுடன் தன் இளமையைத் தந்தான். இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி, நீண்ட காலம் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவன் இளமையைத் தந்தான். புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் என்று பெயர் வரக் காரணமான பரதனாவான். பரதனின் பரம்பரையில் வந்த 'குரு' என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்களே ա.ւկ.-2