பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 பதினெண் புராணங்கள் சென்றான். அங்கு ரம்பா என்ற அப்சரஸைக் கண்டு மணம் புரிய விரும்பினான். இதனால் கோபம் கொண்ட பிரம்மன் அவன் இறந்து போகும்படி சபித்தார். உபவர்ஹனாவின் முதல் மனைவியாகிய மாலவதி கோபம் கொண்டு, தன் கணவனின் இறப்பிற்குக் காரணமாகிய பிரம்மன், சிவன், யமன் ஆகியோரை சாபமிடப் போவதாகக் கூறினாள். இதைக் கேட்ட தேவர்கள் விஷ்ணுவிடம் அடைக்கலம் தேடி ஓடினர். விஷ்ணுவும் ஒர் அழகிய பிராமண இளைஞன் உருவமெடுத்து, மாலவதியின் முன் தோன்றினார். தேவர்களைச் சமாதானப்படுத்தி உபவர்ஹனாவிற்கு உயிர் கொடுக்கும்படிக் கூறினார். பிரம்மன் புனித நீரைத் தெளிக்க சூரியதேவன் கண்பார்வை வழங்க, வாயுதேவன் மூச்சுக் காற்றை வழங்கினான். கிருஷ்ணன் உபவர்ஹனாவின் உடலின் உள்ளே புகுந்து உயிர் கொடுத்தார். பிராமண வடிவத்தில் இருந்த விஷ்ணு, மாலவதிக்கு இறப்பு பற்றியும், அதற்கான காரணங்களையும் எடுத்துக் கூறினார். சில காலங்களுக்குப் பின் உபவர்ஹனா இறந்துபோனான். மாலவதியும், அடுத்த ஜென்மத்தில் உபவர்ஹனாவே தன் கணவனாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு உயிர் துறந்தார். அடுத்த ஜென்மத்தில் சிரின்ஜயா அரசன், மனுவின் வழியில் தோன்றியவனுக்கு மகனாகத் தோன்றினான். இளவரசன் பிறப்பதற்கு முன், நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இக்குழந்தை பிறந்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால், நீரைக் கொடுத்தவன் என்ற பொருள்படும்படி நாரதன் என்று அழைக்கப்பட்டான். நாரதர் நாரதர் மிக இளம்பிள்ளையாக இருக்கும் பொழுதே காட்டிற்குச் சென்று கிருஷ்ணனை தியானம் செய்ய