பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 433 ஆரம்பித்தார். நீண்ட காலம் தியானம் செய்த பிறகு கிருஷ்ணன் எதிரே காட்சி தந்தார். அந்தக் காட்சியில் ஈடுபட்டு நாரதர் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் மறைந்துவிட்டார். குழந்தை நாரதர் மிகவும் துயரம் அடைந்து அழத் துவங்கினார். அப்பொழுது அசரீரி மூலமாக "கவலைப் பட வேண்டாம்; இந்தப் பிறப்பு முடிந்ததும் உனக்கு பிரம்மத்தை அறிந்து கொண்டு அதனிடம் ஒன்றியிருக்கும் நிலைமை ஏற்படும்” என்று வந்தது. அதன்பிறகு பிரம்மா நாரதரை அழைத்து, 'பிரம்மசரியம், கிருஹஸ்தம் முதலிய நான்கு நிலைகளையும் ஒரு மனிதன் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே சென்ற பிறப்பில் மாலவதி என்ற பெயருடன் உனக்கு மனைவியாக இருந்தவள் இப்பொழுது சிரின்ஜய மன்னனுக்கு மகளாகப் பிறந்துள்ளாள். அவளுடன் வாழ்ந்து விட்டுப் பிறகு உன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று புத்திமதி கூறினான். இதன்பிறகு நாரதர், சிவனை தரிசிக்கக் கயிலை மலைக்குச் சென்றார். மிக்க அழகும் வானுயர்ந்த கட்டடங் களும் உடைய கயிலையில் நாரதர் சிவனை வழிபட்டவுடன் இவருக்குச் சில புத்திமதிகளைச் சிவன் கூறினார். குளித்தல், வாய் கொப்புளித்தல் முதலியவற்றை முறையாகச் செய்து விட்டு, கிருஷ்ணனை வழிபட வேண்டும். சிறப்பான வழிபாடு என்பது சந்தனம், பூக்கள், புதிய துணி ஆகிய வற்றை அணிவித்துப் பிரசாதம் படைத்து, கிருஷ்ணனை வழிபட வேண்டும். இன்னின்ன நாட்களில், இன்னின்ன உணவை உட்கொள்ள வேண்டும். இல்லறத்தில் இருப்போர் சோறு முதலியவற்றைக் குறிப்பிட்ட விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில் உண்ணலாம். ஆனால் துறவிகள் காய், கனி, கிழங்குகள் இவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும். - uлф.—28