பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 பதினெண் புராணங்கள் வேறு ஒருவனைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தால் மட்டுமே, சங்கதுடனுக்கு இறப்பு நேரிடும் என்று பிரம்மன் தான் கொடுத்த வரத்தினைப் பற்றிக் கிருஷ்ணனுக்குக் கூறினார். பிராமண உருவம் கொண்ட கிருஷ்ணன், அவ்வரக்கனிடம் சென்று துளசிமாலையினை தானமாகப் பெற்று, சங்கதுடன் உருவம் எடுத்து அவன் மனைவியாகிய துளசியிடம் சென்றான். தன் கணவன் அல்லன் என்றறியாத துளசியும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். இத் தருணத்தில் சிவன் சங்கதுடனைக் கொன்றார். இதை அறிந்து கொண்ட துளசி கடும் கோபம் கொண்டாள். கிருஷ்ணன் ஒரு கல்லின் உருவம் பெறவேண்டும் என்று சாபமிட்டாள். அதுவே சாலக்கிரமம் என்று வழங்கப் பெறுகிறது. துளசியைப் பலவகையிலும் தேற்றிய கிருஷ்ணன் அவள் தெய்வ வடிவு கொண்டு, வைகுந்த லோகம் சென்று அங்கு கிருஷ்ணனை மணம் புரிவாள் என்றும், மானிட உருவில் உள்ள அவள் மறைந்த கந்தகி என்றும் புனித நதியாகி பரதவர்ஷாவில் ஒடுவாள் என்றும் கூறினார். அவளுடைய தலைமுடி துளசி என்னும் புனிதச் செடியாக வளரும் என்றார். துளசி இலையினைக் கலந்த நீரில் குளித்தால், புனித நதிகளில் நீராடியதால் ஏற்படும் புண்ணியம் கிடைக்கும். துளசிச் செடிக்குப் பல பெயர்கள் உள்ளன. அவை விருந்தா, விருந்தாவனி, விஷ்வபுஜிதா, புஷ்யமயா, நந்தினி, துளசி, கிருஷ்ண ஜீவனி ஆகியவை ஆகும். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி அன்று, துளசிச் செடியைத் தொழுவது மிகச் சிறப்பானதாகும். சாலக்கிரமம் மிகச் சிறப்புடையதாகும். இதனை வணங்குப வர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். சாலக்கிரமம் கிடைத்த நதியினில் நீராடுபவர்கள், எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராடிய புண்ணியத்தைப் பெறுகின்றனர். சாலக்கிரமம்