பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பதினெண் புராணங்கள் கெளரவர்கள் ஆவர். மன்னன் குரு ஆட்சி செய்த இடமே குருஷேத்திரம் எனப்படும். யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள், கேரளர்கள், சோழர்கள். யயாதி மன்னனின் மற்றொரு மகனாகிய துருயாவின் பரம்பரையில் வந்தவர்களே காந்தார மன்னனாகிய சகுனி முதலியவர்கள், யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவனே இராவணனை வென்ற கார்த்தவீரிய அருச்சுனன் ஆவான். யயாதியின் மற்றொரு பேரனாகிய குரோஷ்குவின் வழியில் வந்தவனே கிருஷ்ணன். ஆதித்தன் (சூரியன்) கோயில் : கீழ்க்கடற்கரையில் மணற்பாங்கான பிரதேசத்தில் சூரியனுக்கு ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் உள்ள பகுதி உத்கல நாடு எனப்படும். ஆதவனின் பிம்பம் உள்ள இதற்கு 'கோனாதித்யா' என்ற பெயரும் உண்டு. இதற்கு கோனார்கா என்ற மற்றொரு பெயரும் உண்டு. 'அருகன் என்ற பெயரும், 'ஆதித்தன்' என்ற பெயரும் சூரியனைக் குறிக்கும். இவை இரண்டும் கலந்து மருவி கோனாரகா என்று வழங்கப்படுகிறது. இக்கோயிலின் எதிரே கிழக்கு முகமாக நின்று கொண்டு எதிரே உள்ள மணலில், எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை சந்தனக் கட்டையால் வரைய வேண்டும். அத்தாமரையின் நடுவே ஒரு தாமிரப் பாத்திரத்தில் நெய், எள், தண்ணிர், சிவந்த சந்தனக் கட்டை, சிவப்புப் பூக்கள், தர்ப்பை ஆகியவற்றைப் போட்டு, தாமரையின் நடுவே அப்பாத்திரத்தை வைத்து சூரியன் புறப்படுகின்ற நேரத்தில் வழிபட்டால் முன் ஏழு ஜென்மங் களில் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். துவாதச ஆதித்தர்கள் என்று சொல்லப்படும் பொழுது பன்னிரண்டு சூரியர்கள் என்று பொருள் கொள்வது தவறு.