பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 443 லட்சுமியைத் திருப்திப்படுத்த தானதருமங்கள் செய்ய வேண்டும். வீட்டில் துளசிச் செடியை வளர்க்க வேண்டும். சங்கு, சாலக்கிரமம் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். இதனை அடுத்து பிரம்ம வைவர்த்த புராணத்தில் பாற்கடல் கடைந்த கதை பல முரண்பாடுகளுடன் பேசப்படுகிறது. இந்தக் கதை வேறு பல புராணங்களில் காணப்பட்டாலும் இந்தப் புராணத்தில் பல மாற்றங்களுடன் காணப்படுகிறது. முற் பகுதியில் ஐராவதம் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியில் ஐராவதம் பாற்கடலில் இருந்து விழுவதாகக் கூறுவது குழப்பத்தை விளைவிப்பதாகும். (அரசன் கராதாவும், வைசிபன் சமாதியும் தங்கள் குறைகளை முனிவர் மேதாவிடம் கூற அவர் துர்க்கையை வழிபடுமாறு கூறுகிறார்.இக்கதை ஏற்கெனவே மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை அறியவும். மார்க்கண்டேய புராணப்படி மேதா முனிவர்துர்க்காசப்தசதி என்ற எழுநூறு மந்திரங்களால் சண்டிஹோமம் செய்வித்தார் என்பதும், அந்த'ஹோமத்தின் இறுதியில் துர்க்கையின் அருளால் கராதாவிற்கு அவனுடைய ராஜ்ஜியம் திரும்பக் கிடைத்தது என்பதும் அம்பிகையின் அருளில் தோட்த்த அவன் ராஜ்ஜியம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான் என்பதும் இப்புராணத்தில் இடம் பெறவில்லை, பிரபஞ்ச உற்பத்தியின் துவக்கத்தில் தேவர்கள் பிரம்ம லோகம் சென்று தங்கள் உணவை உண்ண ஆரம்பித்தனர். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க, விஷ்ணு யாகத்தின் பலிப்பொருளாகத் தன்னை மாற்றிக் கொண்டு தீயில் புகுந்தார். அந்த யாகத்திற்குப் படைக்கப்பட்ட பொருள்கள் தேவர்களுக்குக் கொடுக்கப்பட அவை தேவர்களைச் சென்று அடையவில்லை. பிரம்மன் பிரகருதியை வேண்டியவுடன், பிரகருதி, சுவாஹா என்ற பெயருடன் நெருப்பின் சக்தியாக